300 நோய்களை விரட்டும் இந்த உணவு குறித்து உங்களுக்கு தெரியுமா? அடுக்கடுக்கான நன்மைகள் கிடைக்குமே!

Report Print Raju Raju in ஆரோக்கியம்
1088Shares

கீரை வகைகள் எல்லாவற்றிலும் உடலுக்கு நன்மை தரும் சக்தி உண்டு. அதிலும் முருங்கை 300 நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி.

நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. முருங்கைக்கீரையில் மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

முருங்கையால் கிடைக்கும் நன்மைகளை காண்போம்

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.

முருங்கை இலையில் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால், உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.

முருங்கை இலைகளை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

முருங்கைக்கீரைகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும்.

முருங்கைக் கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்