நுரையீரலில் உள்ள துர்நாற்றமிக்க சளியை நீக்கனுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நுரையீரல் பாதிப்பால்தான் சளி, இருமல், காய்ச்சல் உண்டாகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது.

இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம்.

நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்ஸிஜனை சுவாசித்து சேகரித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் செயலை செய்கிறது.

இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அந்தவகையில் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்காமால் இருக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என பார்ப்போம்.

  • இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் சேர்த்து, தினமும் சில முறை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலில் இருக்கும் அதிகப்படியான சளி அகற்றப்படும்.

  • கெய்ன் மிளகு எனும் மிளகாய் வகை அதிகப்படியான இருமல் மற்றும் சளியை நீக்க உதவக்கூடியது. இதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், சளியை இளகச் செய்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது.

  • பூண்டில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களால் சுவாச சுரப்பிகளில் உருவாகும் அதிக சளியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. எனவே உங்கள் உணவில் அதிக பூண்டு சேர்த்துக் கொள்வது உடலில் இருந்து அதிகப்படியான சளியை நீக்க உதவும்.

  • அன்னாசி ஜூஸில் உள்ள மியூகோலைடிக் பண்புகள் சளியை முறித்து எளிதில் வெளியேற்ற உதவி புரியும். இதில் உள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆஸ்துமா மற்றும் அழற்சியுடன் தொடர்புடைய சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

  • துருவிய வெங்காயத்தை நீரில் போட்டு 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் இந்த நீரை தினமும் 3-4 டேபிள் ஸ்பூன் குடிக்க வேண்டும். இதனால் அதிகப்படியான இருமல் நீங்கி, ஆரோக்கியமும் மேம்படும்.

  • ஏலக்காய் உணவு உட்கொண்ட பின் நல்ல செரிமானத்திற்கு எடுக்கப்படுகிறது. இது சளி ஜவ்வுகளைப் பாதுகாப்பதன் மூலம், உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. மேலும் இது ஜீரணிக்க கடினமாக இருக்கும் கனமான உணவுகளில் சளியை திரவமாக்குகிறது.

  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, 3 மிளகு, ஒரு சிறு துண்டு பட்டை, 1 ஏலக்காய், 1 ஒரு பூண்டு பல்லை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, இறக்கி, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

  • நற்பதமான கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க, உடலில் உள்ள அதிகப்படியான சளி முறிந்து வெளியேறும்.

  • சுத்தமான தேனை ஒரு டேபிள் ஸ்பூன் அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான பானங்களுடன் சேர்த்து உட்கொள்ளலாம். ஆகவே முடிந்த அளவு தேனை அப்படியே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

  • ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் 5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள அதிகப்படியான சளி இளகி எளிதில் வெளியேறும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்