ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஐந்து உணவுகளை சாப்பிடவே கூடாதாம்! கவனமா இருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஆஸ்துமா வருவதற்கு ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் முக்கியக் காரணங்கள்.

உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.

அதுமட்டுமின்றி சில உணவுகள் கூட ஆஸ்துமாவை தூண்டுபவையாக இருக்கும். இந்த உணவுகளை தவிர்ப்பவை நல்லது.

அந்தவகையில் ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • காபி, தேநீர் மற்றும் சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களில் காணப்படும் சாலிசிலேட்டுகள் சில ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். அதிக அளவில் காஃபினைன் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது.

  • உணவுகளில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கார்பனேற்றப்பட்ட பானங்கள், வெங்காயம், பூண்டு மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இத்தகைய உணவுகள் உங்கள் உதரவிதானத்தில் (ஈரலுக்கும் குடலுக்கும் நடுவே உள்ள சவ்வு) அழுத்தம் கொடுக்கலாம். மேலும் மார்பு இறுக்கத்தை ஏற்படுத்தி ஆஸ்துமா எரிப்புகளைத் தூண்டும்.

  • ஊறுகாய்கள், எலுமிச்சை சாறு, மற்றும் பாட்டில் வைத்திருக்கக் கூடிய எலுமிச்சை சாறு போன்றவற்றில் சல்பைட்டுகள் இருப்பதனால் இது ஆஸ்துமாவை மோசமாக்கும் ஒரு வகை ப்ரீசர்வேட்டிவ் ஆகும்.

  • ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றில் ப்ரீசர்வேட்டிவ் உள்ளன. குறிப்பாக, சல்பைட்டுகள் போன்ற ப்ரீசர்வேட்டிவ். மதுவில் உள்ள ஹிஸ்டமைன்கள் கண்களில் நீர், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.

  • உறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட இறால் ஆனது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டும். இதற்கு காரணம் அதில் உள்ள சல்பைட்டுகள் தான்.

  • ஷெல் பிஷ் பொதுவான உணவு ஒவ்வாமை ஆகும். மேலும், இந்த ஷெல் பிஷ் குடும்பத்தை சேர்ந்த ஓட்டுமீன்கள் குழுவானது அதிக எண்ணிக்கையிலான ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்