முகம் பொலிவுடன் இருக்க இதை செஞ்சின்னா போதும்!

Report Print Nalini in ஆரோக்கியம்
1574Shares

பெண்கள் தங்கள்அழகை பராமரிக்க பியூட்டி பார்லருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதற் கென கணிசமாகவே ஒரு தொகையை மாதந்தோறும் ஒதுக்கியும் வருகிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் உரிய முறை யில் பராமரிக்காமல் போனால் சருமம் என்னவோ பொலிவிழந்துதான் போகிறது

ஆனால் இவ்வளவு செலவு செய்தும் சருமத்தின் அழகு குறைகிறதோ என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். எளிய முறையில் உங்கள் சருமத்தைப் பராமரிக்க இருக்கவே இருக்கு முகத்துக்கு ஆவிபிடிக்கும் முறை அதாவது நீராவி பிடிப்பது என்பது.

ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

சைனஸ் பிரச்சனை வந்தாலே மூக்கடைப்பு, தலைவலி இரண்டும் சேர்ந்து தொற்றிக் கொள்ளும். இந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆவி பிடித்தால் மூக்கடைப்பு நீங்கி சுவாச பாதைகளில் தங்கியுள்ள சளிகள் வெளியேறி விடும். இந்த வெது வெதுப்பான நீராவி நீங்கள் இயற்கையாக மூச்சை உள்ளே இழுக்கவும் வெளியே விடவும் பயன்படுகிறது கூடுதலாக யூகலிப்டஸ் ஆயிலையும் சேர்த்து கொள்வது நல்லது.

வறண்ட சருமம் உடையவர்களின் முகம் பார்ப்பதற்கு களைப்படைந்து போய் காணப்படும். இப்படிபட்டவர்கள் ஆவி பிடித்தால் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைத்து முகம் மென்மையாக இருக்கும்.

சூடான நீரில் இருந்து வெளியாகும் நீராவி முகத்தில் படும் போது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதோடு சுத்தமும் செய்கிறது. நமது முன்னோர்கள் காலம் தொட்டே ஆரோக்கியமான விஷயங்களுக்கு இந்த நீராவி முறையை கடைப்பிடித்து வந்தார்கள். தலையில் நீர் கோர்வை, தலை பாரம் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் இந்த முக நீராவி முறை பல ஆண்டு காலமாக ஸ்பாக்கள், பியூட்டி பார்லரிலும் சரும அழகை பராமரிக்க செய்து வருகிறார்கள்.

இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள் போன்றவை நாளடைவில் மறைகிறது. மேலும் சரும துளைகள் அடைப்பால் ஏற்படும் சரும எரிச்சல், பாக்டீரியா தொற்று போன்றவற்றையும் இந்த நீராவி முறை போக்குகிறது.

நீராவி பேஷியல் முற்றிலும் இயற்கையானது. எளிதாக வீட்டிலேயே செய்ய கூடியது. ஆனால் இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தும்போது சரும சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீராவி பேஷியல்

  • மஞ்சள் தூள்
  • லவங்க பட்டை
  • க்ரீன் டீ
  • தண்ணீர்

பயன்படுத்தும் முறை

க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை அழுக்கில்லாமல் கழுவி கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 3 அல்லது 4 லவங்க பட்டை , 1 ஸ்பூன் க்ரீ டீ ஆகியவற்றை போடவும். பிறகு அடுப்பை அணைக்கவும். ஒரு ஸ்பூனால் அந்த நீரை நன்றாக கலக்கவும். கொதிக்கும் நீர் நல்ல மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்