வயிற்றின் உட்புற புறணி மற்றும் சிறுக்குடலின் மேல் பகுதியில் புண்கள் உருவாகும்போது பெப்டிக் அல்சர் உருவாகிறது.
இந்த நோயானது ஹலிகோ பாக்டர் பைலோரி என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
அதிக மன அழுத்தம், நெஞ்செரிச்சல், பலவீனமாக உணர்தல், அடிக்கடி குமட்டல், கார உணவுகள், அதிகப்படியாக புகைப்பிடித்தல் மற்றும் அதிகப்படியாக மது அருந்துதல் ஆகியவை அல்சர் புண் ஏற்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன.
இதனை எளிய முறையில் குறைக்க வேண்டும் என்றால் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- வாழைக்காயில் லுகோசயனிடினில் ஃபிளவனாய்டு எனும் வேதி தனிமம் உள்ளது. இது வயிற்றுக்குள் சளியை உருவாக்க உதவுகிறது. அதோடு வயிற்றுப் புண்களை ஆற்றும் குணம் கொண்டது. அதனால் அடிக்கடி உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது.
- எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், செர்ரி பழம், நாவல் பழம் ஆகிய பழங்களிலும் ஃபிளவனாய்டு வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இவற்றை உண்பது அல்சர் புண்களுக்கு கூடுதல் சிகிச்சையாகும்.
- தேன் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றம் அதிகம் கொண்ட உணவு பொருள் ஆகும். மேலும் அதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பானது எச் பைலோரி பாக்டீரியா வளர்ச்சியை எதிர்த்து போராட உதவுகிறது.
- முட்டைகோசில் அதிகப்படியான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆங்கில மருந்துகள் வருவதற்கு முன்பே புண்களில் இருந்து நிவாரணம் பெற முட்டைகோசு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- பால் பொருட்களான மோர், தயிர், பாலாடை கட்டி ஆகியவை அல்சர் புண்களை தடுக்கும் மருந்துகளாக உள்ளன. குறிப்பாக பாலைக் காட்டிலும் தயிர் மற்றும் மோர் மிகச்சிறந்தது. மோருடன் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்தும் குடித்து வரலாம்.
- குடலில் ஏற்படும் புறணி வீக்கத்தை சரி செய்ய மஞ்சள் உதவுகிறது. இஞ்சியானது இரைப்பை நோய்களுக்கு நன்மை பயக்கிறது. மேலும் செரிமான பாதையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
- வெள்ளை ஓக் பட்டை இவை குடல் புறணியை பலப்படுத்துகின்றன. மேலும் தொற்றுநோய் குடலை தாக்காமல் இருக்க அவற்றை எதிர்த்து போராடுகின்றன.
- மார்ஷ்மெல்லோ நமது நாட்டில் அதிகப்படியாக பழக்கத்தில் இல்லை. ஆனால் இது வீக்கமடைந்த திசுக்களில் இருந்து சளி திசுக்களை விடுவிக்க உதவுகிறது.