இரத்த அழுத்த பிரச்சனை வராமல் இருக்கனுமா? இந்த சிறிய விதை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
4016Shares

எள் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். எள் உணவிலும், மருத்துவத்திலும் அதிகம் பயன்படுகிறது.

எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள், பழுப்பு அல்லது மஞ்சள் நிற எள் என நான்கு வகைகள் உள்ளன.

அதோடு இந்த சிறிய விதைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.

குறிப்பாக இது இரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து தீரக்க அதிகம் பயனளிக்கின்றது. அதுமட்டுமின்றி கருப்பு எள்ளு உடலில் உள்ள பல நோய்களை தீர்கக உதவி புரிகின்றது.

அந்தவகையில் எள்ளு விதைகளில் கருப்பு எள்ளு விதைகளை அன்றாடம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதை பற்றி பார்ப்போம்.

 • எள்ளு விதைகளில் மக்னீசியம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கக்கூடியது. அதோடு இந்த விதைகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் சீசமின் போன்றவை அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
 • எள்ளு விதைகள் செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கலை சரிசெய்யக்கூடியது. ஏனெனில் இவற்றில் நார்ச்சத்து மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இந்த விதைகள் குடலியக்கத்தை மேம்படுத்தும் மற்றும் செரிமான செயல்பாட்டை மென்மையாக நடைபெறச் செய்யும்.
 • எள்ளு விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடி உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும்.
 • எள்ளு விதைகளில் உள்ள சீசமைன் ப்ரீ-ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.
 • எள்ளு விதைகளை அன்றாடம் உட்கொள்வதன் மூலம், உடலில் செரடோனின் உற்பத்தி அதிகரித்து, மனநிலையில் உள்ள ஏற்ற இறக்கம் தடுக்கப்படும். மேலும் மனநிலையும் சந்தோஷமாக இருக்கும்.
 • எள்ளு விதைகளில் உள்ள மக்னீசியம், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.
 • எள்ளு விதைகளில் கால்சியம் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எலும்புகளை வலிமையாகவும் வைத்துக் கொள்ளும்.
 • எள்ளு விதைகளை ஒருவர் தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக பராமரிக்கப்படுவதோடு, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதையும் தடுக்கலாம்.
 • உங்கள் அன்றாட உணவில் கருப்பு எள்ளு விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும் இந்த சிறிய விதைகளில் வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களை இளமையாகவும், அழகாகவும் வைத்திருக்கும்.
எப்படியெல்லாம் அன்றாட உணவில் சேர்க்கலாம்?
 • எள்ளு விதைகளை அன்றாடம் சாப்பிடும் சாலட்டுகளின் மீது தூவி சாப்பிடலாம். இதனால் சாலட் இன்னும் சுவையாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
 • உங்களுக்கு விருப்பமான க்ரில்டு/தந்தூரி சிக்கன், பன்னீர் அல்லது இறைச்சிகளின் மீது எள்ளு விதைகளைத் தூவி சாப்பிடலாம்.
 • சப்பாத்தி செய்யும் போது, சப்பாத்தி மாவுடன் சிறிது எள்ளு விதைகளையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போடுங்கள். இதனால் சப்பாத்தி நல்ல ப்ளேவருடனும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.


You may like this video

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்