நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசையா? இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் இந்த உணவுகளை தவிர்க்கவும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

தூக்கம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாது ஆகும். ஆனால் இன்றைய நடைமுறையில் பலரும் தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதியுற்று வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். இரவில் சிலர் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு, உடனே படுக்க சென்றுவிடுவார்கள்.

இதனை அந்த உணவுகள் சரியாக சமீபாடு அடையமால் வயிற்றிலே தங்கிவிடுகின்றது. இதனால் தூக்கமும் கெடுகின்றது.

அந்தவகையில் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் சில உணவுகளை தவிர்க்கவேண்டும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • இரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும்.

  • இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  • சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கத்ப் பெற முடியாது போய்விடும். இப்படி தினமும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, திசுக்கள் உடைய வழிவகுக்கும்.

  • பிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும்.

  • பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஆனால் அதனை பகல் நேரத்தில் சாப்பிட்டால் நல்லது. அதுவே இரவில் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் உணவை சாப்பிட்டால், தூக்கமின்மை ஏற்படும். பின் பகல் நேரத்தில் சோர்வுடனேயே இருக்க நேரிடும்.

  • இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. பொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால், இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.

  • வெள்ளை சாதத்தைக் கூட இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. இவை கூட இரவில் தூக்கத்தைக் கெடுக்கும். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேல் இதனை சாப்பிடவே கூடாது. இல்லாவிட்டால் தூக்கத்தை தொலைக்கக்கூடும்.

  • இரவு நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை குடிக்கக்கூடாது. இதில் அசிடிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, இரவில் தூங்க முடியாமல் செய்யும். மேலும் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இது தூக்கத்தைக் கெடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்