பாசிப்பயறை ஊறவைத்து சாப்பிடுவதனால் இந்த அற்புத பலன்கள் எல்லாம் கிடைக்கும்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பாசிப் பருப்பில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அடங்கி உள்ளன.

பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் காப்பர் போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன.

இதைத் தவிர போலேட், நார்ச்சத்துக்கள், விட்டமின் பி6 மற்றும் புரோட்டீன்கள் போன்றவை களும் காணப்படுகிறது.

எனவே இந்த பாசிப் பருப்பை உங்க அன்றாட உணவில் சேர்த்து வருவது உங்களுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

அந்தவகையில் தற்போது இதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

 • கோலிசிஸ்டோகினின் ஹார்மோனின் செயல்பாட்டை மேம்படுத்த பாசிப் பருப்பு உதவுகிறது. இதை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு பசிக்காது. வயிறு நிரம்பிய எண்ணத்தை ஏற்படுத்தும். வளர்ச்சிதை மாற்றத்தை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் உங்க எடையை கட்டுக்குள் வைக்க பாசிப் பருப்பு உதவும்.
 • இதில் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்பில் இருந்து உங்களை காக்கும்.
 • ஒழுங்கற்ற இதயத்துடிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இது எளிதில் சீரணிக்க கூடியது என்பதால் உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.
 • இதிலுள்ள விட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்க கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக உடைக்க பயன்படுகிறது. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
 • இதில் உள்ள ஃபோலிக் அமிலம் ஆரோக்கியமான மூளை செயல்பாட்டையும் டி.என்.ஏ உற்பத்தியையும் பராமரிக்க உதவுகிறது.
 • தினசரி உட்கொள்ளலில் 40.5 முதல் 71 சதவீதம் வரை ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும்.இந்த நார்ச்சத்து உள்ளடக்கம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது,அதிக நார்ச்சத்து உணவுகள் உங்க குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 • பாசிப்பருப்பில் புரதம் இருப்பது நம் மேக்ரோ ஊட்டச்சத்துக்களை பூர்த்தி செய்கிறது. எனவே சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புரத ஆதாரமாகும்.
 • அதிக புரத உள்ளடக்கம் திசுக்களை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும் பங்களிக்கிறது. அதே நேரத்தில் தசைகள், எலும்புகள், குருத்தெலும்பு, இரத்தம் மற்றும் தோல் ஆகியவற்றின் கட்டமைப்புக்கும் உதவுகிறது.
 • பாசிப்பருப்பு குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால். இது உடலில் உள்ள இன்சுலின், இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, மேலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
 • பாசிப் பருப்பை உட்கொள்வது குடலில் ப்யூட்ரேட் எனப்படும் கொழுப்பு அமிலத்தை உருவாக்க உதவுகிறது. இது குடல் சுவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த பருப்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வயிற்றில் வாயு உருவாக்கத்தை தடுக்கிறது. உணவை சீரணிக்க உதவுகிறது.
 • இரத்த சிவப்பணுக்களின் சரியான உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். இது அனிமியா போன்ற இரத்த சோகை நோயை தடுக்கிறது. உடம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்