நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா? அதுக்கு என்ன காரணம் என தெரிஞ்சிகோங்க

Report Print Raju Raju in ஆரோக்கியம்

சிலருக்கு எப்போதும் உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும்.

இவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது 3 வைட்டமின் குறைபாடுகள் தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

வைட்டமின் பி 12

வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி பாதிப்படைகிறது. அதனால், உடல் முழுவதும் ஆக்ஸிஜனின் போக்குவரத்து பாதிப்படையும். இது மேலும் சோர்வுக்கு பங்களிக்கிறது.

வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பவர்கள் மீன், இறைச்சி, முட்டை, சால்மன் சாப்பிடலாம்

வைட்டமின் டி

இந்த வைட்டமின் நம் உடல் சீராக செயல்பட உதவி செய்கிறது. மேலும் எலும்புகள் மற்றும் பற்களுக்கு இது அவசியம். ஏனெனில் இந்த வைட்டமின் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கால்சியத்தை உறிஞ்சுவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

சால்மன், காட் லிவர் ஆயில், முட்டையின் மஞ்சள் கரு, காளான்களை சாப்பிடுவதன் மூலம் டி வைட்டமினை அதிகரிக்கலாம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து இரும்பு சத்தினை உறிஞ்சுவதற்கு முக்கியமானதாக உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் மற்றும் அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியமாக அமைகிறது. உடலில் வைட்டமின் சி சக்தியினை அதிகரிக்க சிட்ரஸ் பழங்கள், கிவி பழம், அன்னாசி, பப்பாளி சாப்பிடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்