குறைந்த ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பெரும்பாலோனர் குறைந்த இரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறைந்த இரத்த அழுத்தம், ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும், அதற்குப் பின்னும் இரத்தக் குழாய்களின் சுவர்களை எதிர்த்து போராடும் போது, இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட குறைவாக இருப்பதால் வருவதாகும்.

இதனை ஆங்கிலத்தில் ஹைப்போடென்ஷன் என்றழைக்கப்படுகின்றது.

இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம்.

சில வகையான உணவுகளை உட்கொள்வதன் மூலம், குறைந்த ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், அதிகளவில் குடிநீர் பருகுங்ககள். ஆல்கஹால் எடுத்துக் கொள்வோராக இருந்தால், நிச்சயமாக நீங்கள் அதை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

  • எளிதில் சீக்கிரம் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். அதைப் பிரித்துப் பல வேளைகளில், சிறிது சிறிதாக சாப்பிடும் பழக்கத்தைத் தொடருங்கள்.

  • விட்டமின் B-12 கலந்திருக்கும் முட்டையை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது உடலில் ரத்த அழுத்தத்தின் அளவைக் குறைத்து, உடல் சோர்வை ஏற்படுத்தும்.

  • உங்கள் அன்றாட உணவுப்பட்டியலில் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் மீன், ஆடு ஆகியவற்றின் இறைச்சிகளை அதிகமதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  • அஸ்பாரகாஸ் என்ற உணவுப்பொருளில் எண்ணற்ற நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இதை பொரியலாகவும், சூப்பகாவும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

  • பீன்ஸ், பயறு,சிட்ரஸ் பழங்கள், கீரைகள், முட்டை, ஆட்டு ஈரல் உள்ளிட்ட போலேட் நிறைந்த உணவுகளை அதிகமதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • நல்ல வகையைச் சேர்ந்த ஆரோக்கியமான கொழுப்புக்கு ஒரு முதன்மையான உதாரணமாக ஆலிவ் எண்ணையைச் சொல்லலாம். அதில், பாலிபீனால் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்தை கோரிக்கும் குணம் கொண்டது.

  • அதிமதுரம் தேநீர் குடிப்பதால் உடலில் ஆல்டோஸ்டிரோனின் விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியமான இதயத்திற்கு அதிமதுரம் மிக்க உதவியாய் இருக்கும். இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்