திடீரென சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உண்டாகும் உபாதைகள் என்னென்னனு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

சில சமயம் கேக், சாக்லேட்டு, குளிர்பானம் ஆகியவை சாப்பிட தோன்றும். மூளையில் செயல்படும் மீஸோலிம்பிக் டோபாமைன் செயல் திறனின் உள்ள நரம்பணுக்கள், இனிப்பு வகைகளை விரும்ப தூண்டும்.

மூளை செயற்பாட்டிற்கு டோபாமைன் மிக முக்கியமான பங்கு வகிக்கும். நமக்குப் பசி இல்லாத போதும், இனிப்பு பண்டங்களைத் தேடிச் செல்ல ஆசையைத் தூண்டும்.

பொதுவாக சர்க்கரை சாப்பிடும் பழக்கம் கொண்ட பலருக்கு இதய நோய்கள் சாதாரணமாகவே வர கூடும். அந்த வகையில் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இதயத்திற்கு வர கூடிய பாதிப்புகள் மிக குறைவு.

மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்து கொள்ளும். சர்க்கரை சாப்பிட கூடிய பல ஆண்களுக்கு கலவியில் ஆர்வம் சீக்கிரமாகவே குறைந்து விடும். மேலும், இது ஆண்களின் உடலில் சில சீரற்ற மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

பெண்களின் ஹார்மோன், சர்க்கரை எடுத்து கொள்வதால் குறையவும் கூடும். எனவே, இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மூளையின் செயல்திறன் அதி வேகமாகவே இருக்க கூடும். மேலும், நல்ல மனநிலையும் உங்களுக்கு ஏற்படும். வேலை பளுவால் எப்போதும் சிடுசிடுவென இருக்கும் பலருக்கு இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

உடல் எடை குறைக்க

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல் எடையை குறைய ஆரம்பிக்கும்.

இளமையாக இருக்க

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் தோலில் உள்ள செல்களை சிதைக்காமல் வைத்து கொள்வதால் என்றும் இளமை தோற்றம் பெறலாம். முக சுருக்கங்கள் வரவே வராது.

இதய நோய்களுக்கு

பொதுவாக சர்க்கரை சாப்பிடும் பழக்கம் கொண்ட பலருக்கு இதய நோய்கள் சாதாரணமாகவே வர கூடும். அந்த வகையில் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இதயத்திற்கு வர கூடிய பாதிப்புகள் மிக குறைவு. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்து கொள்ளும்.

சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உண்டாகும் சில பாதிப்புகள்

  1. இனிப்புகளுக்கான தீரா ஆசை ஏற்படும்
  2. தீராத தலைவலி உண்டாகும்
  3. உடலில் வீக்கம்
  4. ஒருவித பதட்டம்
  5. வயிற்றுப்போக்கு
  6. குமட்டல்
  7. அடிக்கடிக்கு சோர்வு
  8. சில சமயம், மன அழுத்தம்
  9. தீராத பசி

இவற்றை தவிர்க்க பாக்கெட் சர்க்கரை உபயோகிப்பதை நீறுத்திவிட்டு, இயற்கையான தேன், வெல்லம் ஆகியவற்றை தினசரி பயன்படுத்த தொடங்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்