வெறும் பாலை காலை உணவாக குடிக்கலாமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

பால் நமது சமையலறையில் மிக முக்கியமான பொருட்களுள் ஒன்றாகும். 100 கிராம் எள்ளில், 1300-1400 மி.கி. கால்சியம் உள்ளது; ஆனால் 100 மில்லியன் பாலில் வெறும் 280-300 மில்லி கால்சியம் உள்ளது.

பால் குடித்தால் மட்டும் நமக்கு அனைத்து சத்துக்களும் கிடைத்து விடாது. எனவே, பாலை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பல உடல் உபாதைகள் ஏற்படும்.

உணவிற்கு பதிலாக தொடர்ந்து பாலை மட்டும் காலை உணவாக எடுத்துக் கொண்டுட வந்தால் நம் உடலில் இரும்புச் சத்துது குறைபாடு ஏற்படும். பாலில் உள்ள அமினோஆசிட், உறக்கத்திற்கு உதவும் ஹார்மோனைன அதிகளவில் சுரக்கச் செய்து, அதிக உறக்கத்தை ஏற்படுத்தி விடும்.

காலை உணவை தவிர்த்து பாலை மட்டும் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை இப்போது பார்ப்போம்

பால் காலையில் குடித்தால்

பாலில் ப்ரோட்டீன், கால்சியம், விட்டமின்,பொட்டாசியம் ,மக்னீசியம் போன்ற சத்துக்கள் எல்லாம் நிறைந்திருக்கிறது. உணவு சாப்பிடாமல் பாலை மட்டும் குடித்தால் நமக்கு ரத்த சோகை ஏற்பட்டு விடும்.

நீண்ட நேரம் இடைவேளி இருப்பதால் மூளைக்கு குளோக்கோஸ் தேவைப்படும். அதனால் வெறும் பாலை காலை உணவாக சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும்.

உணவில் ஒரு பகுதியாகபாலை சேர்க்கலாமா?

நாம் சாப்பிடும் உணவாகத்தான் பால் இருக்க வேண்டும். பின்னர் காலையில் சரிவிகித உணவை சாம் சாப்பிடலாம். பால் குடித்தால் எல்லாச் சத்துக்களும் கிடைத்துவிடும் என்று அர்த்தம் கிடையாது. மீறி காலை உணவாக பாலை குடித்தால் பல்வேறு உடல் உபாதைகள் வரக்கூடும்.

பால் குடித்தால் கால்சியம் கிடைக்குமா?

பால் குடித்தால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும் என்ற எண்ணத்தை முதலில் நிறுத்தி விட வேண்டும். பாலை விட ராகி,ராஜ்மா, சோயாபீன்ஸ் போன்றவற்றில் பன்மடங்கு அதிகமான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

பால் சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்குமா?

பாலில் இருக்கும் அமினோ ஆசிட், தூக்கத்திற்கு உதவும் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்யும். அதனால் பால் குடித்தால் தான் இரவில் முழுமையாக தூங்க முடியும் என்ற எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்