தினமும் சுடுதண்ணீர் குடித்து பாருங்க! உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடா பார்க்கலாம்

Report Print Nalini in ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் தினமும் காலையில் சுடுதண்ணீரில் எலுமிச்சையை கலந்து பருகினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

அளவுக்கு அதிகமாக உணவு, எண்ணெய் பலகாரம், இனிப்பு, போன்றவை சாப்பிட்டால் சில நேரங்களில் நெஞ்சு கரிக்க தொடங்கும்.

குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வாருங்கள். அது ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள்.

உடலில் ஈரப்பதத்தை தக்கவைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் ஈரப்பதத்தை தக்கவைப்பதன் மூலம் தோல் பளபளப்பையும் அதிகரிக்க முடியும். குறைந்தபட்சம் ஒரு நபர் 2 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிகமான தண்ணீர் அருந்துவது நமது உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமான ஓன்று. அதிலும் குறிப்புக்காக காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.

அதேபோல் குளிர்ந்த நீரை விட வெந்நீரை ஆறவைத்து குடிப்பதனால் மேலும் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது.

மூக்கடைப்புக்கு சரியாக

நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் மூக்கடைப்பு ஒன்று. இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனையை சரிசெய்யலாம்.

நச்சுக்கள் நீங்க

வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயரும். அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறி விடும். இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேறி உடல் சுத்தமாகும்.

பருக்கள் மறைய

அடிக்கடிக்கு டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெண்களுக்கு எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பருக்கள் ஏற்படும். இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வந்தால் பருக்கள் விரைவில் மறையும், முகமும் பொலிவடையும்.

முடி வளர்ச்சிக்கு

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.

இரத்த ஓட்டம் சீராக இருக்க

வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் நீங்கும்.

குடல் இயக்கம் சீராக செயல்பட

மிதமான சுடுநீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.

எடை குறைக்க

தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான் சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்சனை குறைய

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்