உடல் எடையை விரைவில் குறைக்கணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Report Print Nalini in ஆரோக்கியம்
3129Shares

இன்றைய தலைமுறையினரிடம் உடல் எடை அதிகரிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இதற்கு காரணம் அவர்களின் உணவு முறையே.

தினமும் காலையில் உடல் எடை குறைப்பதற்காக பழச்சாறுகளை குடிக்கிறோம். காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்களுக்குத்தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல் எடையை குறைக்க எண்ணினால் இதை பாலோ பண்ணுங்க

லஸ்ஸியின் நன்மைகள்

 • லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவி செய்யும். உடலின் ஜீரண சக்தியை லஸ்ஸி பலப்படுத்தும்.
 • லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவி செய்யும்.
 • லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக இருப்பதால் இவற்றை நாம் குடிக்கும் போது நம்முடைய தசைகளை வலிமையாக்கும். கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

டயட்டில் இருக்கும்போது லஸ்ஸி குடிக்கலாமா?

 • டயட்டில் இருக்கும் போது நாம் லஸ்ஸியை குடிக்கவே கூடாது. இந்த லஸ்ஸி பானமானது தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நாம் சாப்பிட்டால் இந்த பானத்தில் கொழுப்புக்களும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கச் செய்து விடும். எனவே, டயட்டில் இருக்கும்போது இவற்றை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.

பாதாம் பால்லின் நன்மைகள்

 • பாதாம் பருப்பை ஊறவைத்து தண்ணீர்விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டினால் கிடைப்பதுதான் பாதாம் பால்.
 • பாதாம் பாலில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் லாக்டோஸ் சுத்தமாக இல்லை என்பதால், லாக்டோஸ் ஒவ்வாமைப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும்.
 • இதய நோய் உள்ளவர்கள், முதியவர்கள் கொலஸ்ட்ராலைத் தவிர்க்க வேண்டும் என்றால் பாதாம் பாலை குடிக்கலாம்

டயட்டில் இருக்கும்போது பாதாம் பால் குடிக்கலாமா?

 • இப்போது பாதாம் பால் அல்லது சாக்லேட் பாலைப் பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் கடைகளில் விற்கப்படும் பாதாம் பவுடர் மற்றும் சாக்லேட் பவுடரை பாலில் சேர்த்து கலந்து பருகினால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். முடிந்த அளவு இவற்றை தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழமும், பாலின் நன்மைகள்

 • வாழைப்பழத்தில் வைட்டமின் பி அதிகமாக இருக்கிறது. இந்த வாழைப்பழத்தை பெண்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை சரியாகும்.
 • பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளாக உள்ளன. இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை நிறைந்துள்ளது.
 • ஒரு லிட்டர் மாட்டுப்பாலில் முப்பது முதல் முப்பத்தியைந்து கிராம் புரதம் கலந்திருக்கிறது. பாலில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் குளோரின் அனைத்தும் கிடைக்கும்.

டயட்டில் இருக்கும்போது வாழைப்பழமும், பாலும் சேர்த்து சாப்பிடலாமா?

 • டயட்டில் இருக்கும் போதுத வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாக சாப்பிடவே கூடாது.
 • பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டுவது நல்லது. அதனை ஜூஸ் வடிவில் தயாரித்துப் பருகும் போது, அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்க்க நேரிடுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடும்.

எலுமிச்சை ஜூஸ்

 • உடல் எடை மற்றும் அழகைப் பாராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல் உண்ணும் உணவிலும் எலுமிச்சையை பயன்படுத்தினால் மிகவும் பலன் கொடுக்கும். மிக விரைவில் உடல் எடை குறையும்.
 • எலுமிச்சை டயட்டில் இருக்கும்போது, கொழுப்புக்களை சிட்ரஸ் பழங்களாலான பழச்சாறுகளை அதிகம் பருகலாம். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிற்று பிரச்சினைகளும் சரியாகும்.
 • தேனில் ஆண்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதோடு, கொழுப்பைக் குறைக்கும் பொருளும் அதிகமாக இருக்கிறது. எனவே தேனை டயட்டில் இருக்கும்போது சாப்பிட்டால் கூடுதல் நன்மை கொடுக்கும்.
 • தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறைந்து போகும்.
 • எடையை குறைக்க நினைக்கும் போது, அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும். அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது, ஆகவே சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் மிக விரைவில் குறைந்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்