மறந்தும் கூட பாதாம் அதிகம் சாப்பிடாதீங்க!... பக்கவிளைவுகள் ஏராளம்

Report Print Nalini in ஆரோக்கியம்

ஊட்டச்சத்துகள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஒரு ஆரோக்கிய சிற்றுண்டிதான் பாதாம்.

வைட்டமின் ஈ சத்து, மெக்னீசியம் போன்றவை அதிகமாக இருக்கும் பாதாமில், நார்ச்சத்துகளும் அதிகளவில் உள்ளன.

ஆனால், அதிகளவில் பாதாம் சாப்பிட்டால் சிலருக்கு பாதாம், இரைப்பைத் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இதனால் வயிறு வீங்கியதுபோன்ற உணர்வு ஏற்படும்.

பாதாம், உயர் நார்ச்சத்து கொண்ட உணவாக இருப்பதால் இந்த பாதிப்பு உண்டாகலாம், ஆனால் பாதாம் ஒவ்வாமை காரணமாகவும் இந்த வயிறு வீக்கம் ஏற்படும்.

ஒரு நாளில் 3-4 பாதாம் பருப்பு சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் அது உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.

யாரெல்லாம் அதிகளவில் பாதாம் சாப்பிடக்கூடாது. பாதாம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்

வயிற்றுக் கோளாறுகள்

அதிகப் படியான பாதாம் நாம் எடுத்துக் கொள்ளும் போது அது செரிமானம் அடைய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதோடு பிற உணவுகளை யும் செரிமானம் ஆவதை தடுக்கும். இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படக்கூடும்.

நார்ச்சத்து அதிகமிருக்க க்கூடிய எந்த பொருளை நீங்கள் உணவாக எடுத்துக் கொண்டாலும் அது செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

அதற்கு அதிகப் படியான தண்ணீர் தேவை. பாதாமை செரிக்க வைக்க தண்ணீர் குடிக்கிறேன் என்று சொல்லி வழக்கத்தினை விட அதிகளவு தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் சோடியம் அளவு குறையும். இதனால் மேலும் சில உபாதைகள் சருமப் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படலாம்.

மக்னீசியம்

நீங்கள் அன்றைக்கு எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலும் மக்னீசியம் இருக்கிறது. இதைத் தவிர வழக்கம் போல அளவுக்கு அதிகமாக பாதாம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொன்னால் நம் உடலில் கூடுதலான மக்னீசியம் சேர்ந்திடும்.

ஏனெனில் பாதாமில் மக்னீசியம் இருக்கிறது. இது ரத்த அழுத்தம் உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். ஒரு நாளைக்கு உங்களுக்கு 1.3 முதல் 2.3 மில்லி கிராம் வரையிலான மக்னீசியம் போதுமானது.

விட்டமின் இ

ஒரு நாளில் நமக்கு 15மில்லி கிராம் வரையிலான விட்டமின் இ போதுமானது. பாதாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவ தால் விட்டமின் இ நம் உடலில் 1000 மில்லி கிராம் வரையிலும் அதிகரித்து விடும். இதனால் வயிற்றுப் போக்கு, தலைவலி,உடற்சோர்வு ஆகியவை ஏற்படும்.

உடல் எடை

பாதாம் அதிகளவு சாப்பிடுவதால் ஏற்படுகிற பின் விளைவுகளில் மிகவும் முக்கியமானது இதுவே. ஆம், அளவு தெரியாமல் அதிகளவு பாதாம் எடுத்துக் கொள்வதால் அது நம் உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாதாமில் கொழுப்பு இருக்கிறது.

ஏற்கனவே கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது கூடவே பாதாமும் என்றால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கிறது. பாதாம் சாப்பிடுவதால் கிட்டத்தட்ட 2000 கலோரிகள் வரை கூடுதலாக நம் உடலில் சேரும் வாய்ப்பு இருக்கிறது.

பாதாமில் அதிகளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் இருப்பதால் பாதாம் அதிகம் சாப்பிட்டால் 100 கிராம் பாதாம் உங்களுக்கு 50 கிராம் கொழுப்பை தந்து விடும். இதனால் உடல் எடை அதிகரித்துவிடும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் அல்லது பித்தப்பை நோய் பாதிப்பு உள்ளவர்களும் பாதாம் பருப்பை சாப்பிட கூடாது.

தலைவலி

பாதாமில் அதிக அளவு வைட்டமின் E காணப்படுகிறது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு தலைவலி, சோர்வு உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்நலப் பிரச்சினை காரணமாக நீங்கள் ஆண்டிபயாடிக் மருந்தை உட்கொண்டால், பாதாம் சாப்பிடவே கூடாது.

வயிறு வீக்கம்

பாதாம் சாப்பிட்டவுடன் வயிறு வீக்கம் ஏற்படுவது செரிமானம் தொடர்பான கோளாறான எரிச்சல் ஏற்படுத்தும் குடல் நோய்க்குறி போன்றவற்றின் பாதிப்பால் ஏற்படும்.

நச்சுத் தன்மை அதிகரித்தல்

உப்பு மற்றும் காரம் சேர்க்கப்பட்டு சாப்பிடும் பாதாம் நல்லது என்றாலும் கூட, அவற்றை நீங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கிவிடும்.

ஒரு நாளைக்கு முக்கால் கப் பாதாம் அதாவது 40 கிராமிற்கு மேல் கண்டிப்பாக பாதாம் சாப்பிட கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாக்டீரியா

உடலில் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு பாதாம் துணை நிற்கும். இதனாலேயே பல நாடுகளில் பாதாம் தீங்கு விளை விக்கக்கூடியது என்று தடை செய்திருக்கிறார்கள். இதனால் தான் பாதாம் ஊற வைத்து சாப்பிடும் பழக்கமும் வந்துள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்