உடல் எடை குறைக்கும் அற்புத உணவுகள்! தினமும் சாப்பிட்டு பாருங்க... தெரியும் மாற்றம்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
8023Shares

இன்று ஏராளமான மக்கள் சந்திக்கும் ஓர் முதன்மையான முக்கிய பிரச்சனையாக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளது.

தற்போது பலரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உடலுக்கு போதிய வேலை கிடைக்கப் பெறாமல், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் ஆங்காங்கே தங்கிவிடுகின்றன.

மேலும் பல புதுமையான நொறுக்குத்தீனிகளும் ஒருவரது உடல் பருமனுக்கும், தொப்பைக்கும் முக்கிய காரணங்களாகின்றன.

இதனை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பலருக்கு நல்ல பலன் கிடைப்பதில்லை.

உடற்பயிற்சி,உணவு கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொண்டாலும் சிலருக்கு உடல் எடை குறைவதில்லை.

நாம் அன்றாடம் உண்ணும் உணவு பொருட்களிலேயே உடல் எடையை குறைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

  • எலுமிச்சைப்பழம் : மிக வேகமாக உடல் எடையை குறைக்க உதவும்.1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரைமூடி எலுமிச்சைச்சாறு ,ஒரு சிட்டிகை உப்பு அல்லது ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

  • இலவங்க பட்டை :உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை இலவங்க பட்டைக்கு உண்டு.1 டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி பட்டை பொடி சேர்த்து கொதிக்கவிட்டு தேன் கலந்து குடிக்கவேண்டும்.

  • வெந்தயம் :வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதை வெந்தயதோடு குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

  • கிரீன் டீ :இதில் அதிகளவு பாலிபீனால் இருக்கிறது.காலை ,மாலை கிரீன் டீ குடித்துவந்தால் உடல் எடை குறையும்.

  • ஆப்பிள் :தினமும் 1 ஆப்பிள் சாப்பிட உடல் எடை குறையும்.

  • பாதம் :இதில் ஒமேகா 3 fattyacids என்ற நல்ல கொழுப்பு உள்ளது.இது கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.

  • கொள்ளு - ஆங்காங்கே தேங்கி நிற்கும் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.கொள்ளுவை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் குடித்துவரவேண்டும்.

  • ஆளி விதை :1 டம்ளர் நீரில்1 தேக்கரண்டி ஆளி விதை போட்டு கொதிக்கவிட்டு குடித்துவரலாம்.

  • முருங்கைக்கீரை : இது உடலில் மெட்டபாலிசம் அளவை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

  • சுடுதண்ணீர் - காலையில் எழுந்தவுடன் 1 டம்ளர் சுடுதண்ணீர் குடித்துவந்தால் உடல் எடை குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்