உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதா? அதனை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.முன்பு எல்லாம் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும்.

ஆனால் தற்போது இளம் வயதினர் இப்பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

இரத்த அழுத்தம் வருவதற்கான காரணம் என்ன,இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் என்னென்ன,தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை இத்தகவலில் பார்ப்போம்.

இரத்த அழுத்தம் வருவதற்கான காரணங்கள்

 • உடல் எடை அதிகமாக இருத்தல்
 • உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்ளுதல்.
 • மது மற்றும் புகை பழக்கம்.
 • சரியான உடற்பயிற்சி இல்லாமை
 • கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்.
 • போன்ற காரணங்களால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள்

 • மாரடைப்பு
 • பக்கவாதம்
 • சிறுநீரக பாதிப்பு
 • கண்பார்வை குறைபாடு
 • மூலையில் இரத்த கசிவு
 • இதய துடிப்பில் கோளாறு

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்

 • காலையில் 1 டம்ளர் நீரில் அரை மூடி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடிக்கவேண்டும்.

 • பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

 • வெந்தயத்தை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் மற்றும் நீரை டீ,காபிக்கு பதிலாக குடித்துவரலாம்.

 • தினமும் 3 சின்ன வெங்காயத்தை கடித்து சாப்பிடவேண்டும்.

 • பெரிய நெல்லிக்காய் மற்றும் பீட்ரூட் ஜூஸை வாரத்திற்கு 3 நாட்கள் குடிக்கவேண்டும்.

 • வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்