கரும்பு ஜூஸ்ஸில் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு உங்களுக்கு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

ஒரு ஆரோக்கியமான டயட்டில் பழச்சாறுகளும் முக்கிய பங்கு இருக்கிறது.

காய்கறி ஜூஸ்கள் மிகவும் பிரபலமானதாக மற்றும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அனைவராலும் காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவே முடியாது.

ஆனால் சில வகை ஜூஸ் அனைவருமே விரும்பி குடித்துவிடுவோம். இனிப்பு என்றாலே அது கரும்பு தான். இனிப்பு சுவையில் கரும்பை மிஞ்ச வேறு எந்த ஒரு பொருளாலும் கொடுக்க முடியாது.

கரும்பு ஜூஸ் சுவைக்கு மாத்திரம் இன்றி சில மருத்துவ குணம் மிக்கதாகவும் கருதப்படுகின்றது. கரும்பு சாற்றில் ஒரு சில சிறந்த ஆரோக்கியமான பயன்கள் இருக்கின்றன.

அவற்றை நாம் இங்கே தெரிந்து கொள்வோம்

  • சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீkiரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவி செய்யும்.
  • உடலில் இருந்து நச்சுக்களை நீங்கி விடும்.
  • கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவி செய்யும்.
  • உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கும்.
  • கரும்பு சாறு என்பது உடனடி ஆற்றலிற்க்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது.
  • நீங்கள் மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கும்.
  • உங்கள் தொண்டைக்குள் திடீர் அரிப்பு அல்லது எரிச்சலை நீங்கள் உணர்ந்தால், கரும்பு சாற்றை ஒரு குவளையும் சுண்ணாம்பு மற்றும் கருப்பு உப்பு ஒரு குவளையுடன் குடிக்கணும்.
  • வைட்டமின் சி மிகுதியாக கரும்பு சாறுகளில் காணப்படுகிறது, இது தொண்டை புண் குணமாக உதவி செய்யும்.
  • கரும்பு சாறு என்பது வைரஸ்கள் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகும்.
  • முகப்பருக்கள் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய தொல்லையாக உள்ளது. நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்க உதவி செய்யும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்