தினமும் பிளாக் டீயை குடித்தால் நன்மைகள் ஏராளம்

Report Print Nalini in ஆரோக்கியம்

உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் அதிகமாக விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் உள்ளது.

இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் உள்ளன.

சீனாவில் தான் முதன்முதலில் டீ கொண்டு வரப்பட்டன.

உலக நாடுகளில் அதிகம் குடிக்கும் பானமாக இருப்பது காபியும், டீயும் தான் இருக்கிறது.

அதில் பிளாக் டீ அனைவரும் ஆரோக்கியத்திற்காக அருந்தும் பானமாக மாறியுள்ளது.

பிளாக் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்

  • ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரில் பிளாக் டீ கலவையைக் கலந்து, அதற்குள் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைத்திருந்து பின் சுத்தமான நீரினால் கழுவினால் கால்களில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி சுத்தமாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும்.
  • ஈரமான பிளாக் டீ பேக்கை பல் மற்றும் ஈறுகளில் உள்ள வீக்கத்தைக் குறைப்பதற்கு பயன்படுத்தலாம். வீக்கத்தின் மீது சிறிது நேரம் வைத்து அழுத்திக் கொண்டிருந்தால் வீக்கம் குறைந்து விடும்.
  • பத்து நிமிடங்களுக்கு சூடான நீரில் இரண்டு பிளாக் டீ பைகளை ஊற வைத்து அதிகப்படியான திரவத்தை அழுத்தி கண் எரிச்சல் உள்ள பகுதிகளில் வைத்தால் சீக்கிரமாக சரியாகிவிடும்.
  • பனி வெடிப்பு உள்ள இடத்தில் வெதுவெதுப்பான டீ பேக்கை 10 நிமிடங்கள் வரை அழுத்திப் பிடித்தபடி வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறையாவது இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பனி வெடிப்பு சீக்கிரம் சரியாகிவிடும்.
  • ஒவ்வாமை என்னும் அழற்சியில் இருந்து விடுபட, பிளாக் டீ சிறப்பாக செயல்படும். அதற்கு மிகச்சிறந்த மருந்தாக கருப்பு தேயிலை இருக்கும்.
  • பிளாக் டீ சருமத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அடிக்கடி அழற்சி ஏற்படுகிறவர்கள் அடிக்கடி தேநீர் குடிப்பதாலும் அழற்சியிலிருந்து விட்டுவிட முடியும்.
  • சருமம் தொடர்புடைய நோய்களுக்கு மூன்று முதல் ஐந்து தேநீர் பைகளை தண்ணீர் ஒரு நிரப்பப்பட்ட ஒரு பக்கெட்டில் போட்டு ஊற வைக்க வேண்டும். அந்த தேநீரில் உள்ள tannic அமிலங்கள் வீக்கம் மற்றும் நமைச்சலுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக உதவி செய்யும்.
  • பிளாக் டீயில் உள்ள டானின்கள் குடலில் உள்ள சவ்வுகளில் தேங்கும் சளியால் சிலருக்கு வயிற்றுப் போக்கும் அழற்சியும் உண்டாகும். உடலில் உள்ள திரவங்களை உறிஞ்சி உடலில் ஏற்படுகின்ற அழற்சியை குணமடையச் செய்யும்.
  • முகம், கழுத்து, தோள்கள், கயிறுகள் மற்றும் புட்டப் பகுதி ஆகியவற்றில் தோன்றும் சூட்டுக் கொப்பளங்களும் கட்டிகளும் போக்க போக்க சூடான தேநீர் பையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து தடவை வரை பயன்படுத்தலாம்.
  • ஒரு சூடான, பிளாக் டீ பேக்கை எடுத்து நேரடியாக வலி உள்ள இடத்தில வைக்க வேண்டும். முன்பே கூறியது போல, பிளாக் டீயில் உள்ள tannic அமிலம் வீக்கம் குறைத்து விடும். இப்படி அடிக்கடி வைத்து வந்தால், மூலத்தால் உண்டாகும் ரத்தப்போக்கு குறைந்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்