இரைப்பை குடல் அழற்சியால் அவஸ்தையா? இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

Report Print Balamanuvelan in ஆரோக்கியம்
511Shares

இரைப்பை அழற்சி என்பது மிகவும் பொதுவான செரிமான பாதை கோளாறுகளில் ஒன்றாகும். இது வயிற்றின் உட்புற வரிசையில் வீக்கம் மற்றும் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது.

வாந்தி , வயிற்று வலி , நீர் போன்ற வயிற்றுப் போக்கு , வயிற்று பிடிப்புகள் , குமட்டல் , உடல் வறட்சி ,லேசான தலை பாரம் ,தலை வலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு தீவிரமானால் அல்லது தாங்க முடியாத அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள் அவசியமாகும். இல்லாவிடின் பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

இருப்பினும் லேசான அறிகுறிகளை சந்தித்தால், மருத்துவரிடம் செல்லும் முன், சில கை வைத்தியங்களை மேற்கொண்டாலே எளிதில் சரிசெய்துவிட முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • தினமும் கட்டாயம் 1 கப் யோகர்ட் சாப்பிட வேண்டும். ஏனெனில் யோகர்ட்டில் புரோபயோடிக்குகள் வளமாக அளவில் உள்ளது. ஆகவே இதை ஒருவர் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள அழற்சி குறைந்து, இரைப்பையில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும்.

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை தினமும் 2 முறை குறைக்க வேண்டும். உடல் வறட்சியை சந்திப்பவர்கள், தேனை ORS திரவத்துடன் கலந்து குடிக்க வேண்டும். இது வயிற்றில் உள்ள எரிச்சலைத் தணித்து, அறிகுறிகளையும் குறைக்கும்.

  • வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட பச்சை வாழைப்பழத்தை நீரில் கழுவி, நீரில் தோலுடன் சேர்த்து 7-10 நிமிடங்கள் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். பின் தோலை உரித்துவிட்டு, வாழைப்பழத்தை மசித்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால், சுவைக்கேற்ப அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது வயிற்று அழற்சி அல்லது இரைப்பை குடல் அழற்சிக்கு உதவுகிறது.

  • ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 சிறிய துண்டு பட்டையைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இறக்கி சிறிது நேரம் மூடி வைத்து பின் வடிகட்ட வேண்டும். பிறகு அதில் சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும். இதை ஒருவர் உட்கொண்டு வந்தால், வயிற்று பிரச்சனைகளை விரைவில் குணமாகும்.

  • வயிற்று அழற்சிக்கு சிறந்த தீர்வாக அரிசி நீர் விளங்குகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த வழி பரிந்துரைக்கப்படுகிறது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும், இரைப்பை குடல் அழற்சிக்கு சிகிச்சை அளிப்பதற்கும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்