உங்கள் இதயத்தில் ஓட்டை உள்ளதை வெளிக்காட்டும் ஆபத்தான அறிகுறிகள் உங்களுக்கு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்
397Shares

உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு. ஒருவரது இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் இரத்தம் தங்கு தடையின்றி சீராக கிடைக்கும்.

தற்போது இதய பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அதிலும் இதயத்தில் ஓட்டை போன்ற பிறவியுடன் தோன்றக்கூடிய இதய நோய்கள் பற்றி அறிந்து கொள்வதால் அந்த நிலையை எளிதாக கையாள முடியும்.

இவ்வித பாதிப்புகள் பற்றி தக்க சமயத்தில் உணர முடிவதால் மற்றும் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வதால் அதற்கு தகுந்த சிகிச்சையை உரிய நேரத்தில் பெற்று விடலாம்.

அறிகுறிகள்

 • மூச்சுத்திணறல் ஏற்படுதல்
 • அதிக சோர்வு
 • கால்களில் வீக்கம் ஏற்படுதல்
 • வயிறு, கால் பாதம், இதயம் போன்றவை படபடப்பாக இருப்பது போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன.
இத்தகைய எச்சரிக்கை அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஏட்ரியல் செப்டல் குறைபாடு

 • ஏட்ரியல் செப்டல் குறைபாடு (Atrial Septal Defect/ASD) என்பது ஒருவரின் இதயத்தின் இரண்டு மேல் அறைகளுக்கு இடையில் செப்டம் என்னும் சுவரில் உண்டாகும் ஒரு துளை என கண்டறியப்படுகிறது.
 • இந்த நிலை பிறக்கும் போதே உண்டாகிறது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும். சிறிய பாதிப்புகள் பெரிய பிரச்சனைகளை உண்டாக்குவது கிடையாது.
 • மேலும் குழந்தை பருவத்தில் அல்லது பிள்ளைப் பருவத்தில் இந்த ஓட்டை தானாக மறையக்கூடிய வாய்ப்புகள் இருகின்றன.

பெரிய துளையால் சந்திக்கும் பிரச்சனைகள்

 • செப்டம் துளையின் வழியாக அதிக அளவு இரத்தம் நுரையீரல் வழியாக செல்லும் வாய்ப்பு உண்டாகின்றன.
 • இந்த துளையின் அளவு பெரிதாகும் போது மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
 • அந்த நபரின் இதயம் மற்றும் நுரையீரல் சேதமடையலாம்.
 • பெரிய பாதிப்புகள் ஆயுட்காலத்தை குறைக்கலாம், இதயத்தின் வலது பக்கம் செயலிழக்கலாம், இதயத்துடிப்பில் அசாதாரண நிலை உண்டாகலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்