மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க இதை கடைப்பிடித்தால் போதும்!

Report Print Nalini in ஆரோக்கியம்
4325Shares

பெண்களை தாக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த மார்பக புற்றுநோய். இந்த மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு ஒரு சவாலான பிரச்சனையாகவே இருக்கின்றன.

இந்த மார்பக புற்றுநோயானது சில விஷயங்களை சார்ந்து இருக்கின்றன. இது வயது, குடும்ப வரலாறு, மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பாலினம் போன்றவற்றை பொருத்து வருகின்றன.

மேலும் இது நமது வாழ்க்கை முறை சார்ந்தும் வர வாய்ப்புகள் இருக்கிறது. மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க நாம் தினசரி உடற்பயிற்சி, மற்றும் புகைப்பழக்கங்கள் இல்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி நீங்கள் ஒரு சில உணவுகளையும் உங்களது டயட்டில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

மிளகு

மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றன.

மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை எப்போதும் பாதுகாக்கும்.

மஞ்சள்

மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை. மஞ்சள் உடலிற்கு உள் மற்றும் வெளியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்கின்றது.

மஞ்சள் கேன்சரின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. கேன்சர் செல்களை விரைவாக வளருவதை மஞ்சள் தடுக்கும். மஞ்சளின் நன்மைகளில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், இது கேன்சரை தடுக்க பயன்படுகிறது என்பது தான் உண்மை.

காய்கறிகள், பழங்கள்

பல வகையான வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களை கண்டிப்பாக உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும். இது உங்களது உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும்.

அத்தியவசிய சத்துக்கள்

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் நிச்சயமாக நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம். இந்த நார்ச்சத்துக்கள் உங்களுக்கு முழு தானிய உணவுகள், பீன்ஸ் போன்ற உணவுகளில் இருந்து கிடைக்கும்.

பால் பொருட்கள்

நீங்கள் குறைந்த கொழுப்பு உடைய பாலை தினமும் பருகி வரலாம். அதுமட்டுமின்றி பால் பொருட்களையும் உங்களது உணவில் முக்கியமாக சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

சோயா பின்ஸ்

சோயா பின்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது. நீங்கள் சோயா பின்ஸ் சம்பந்தப்பட்ட உணவு பொருட்களை அடிக்கடி உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பலனை தருமாம்.

விட்டமின் டி

உங்களது டயட்டில் விட்டமின் டி ஊட்டச்சத்து உள்ள உணவுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டியது அவசியமாகும். இந்த உணவுகளை உண்பதன் மூலமாக உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்