உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
5579Shares

பொதுவாக ஒருவருக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் திரும்பத் திரும்ப வருகிறது என்றால், அவர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என அர்த்தம்.

பலவீனமான உடல் அமைப்பு, மன அழுத்தம், ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய சூழல்,தூக்கமின்மை ,சர்க்கரை மற்றும் புற்றுநோய் பாதிப்பு போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்கள் ஆகும்.

குறிப்பாக நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அவற்றில் சில உணவுகள் நம் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கவும் கூடும்.

அவற்றை நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர் தவிர்த்து விட வேண்டும். இல்லாவிடின் வேறு பல நோய்களை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கடல் சிப்பி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில நுண்ணுணிரிகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க முனையுமாம்.

  • முளைக்கட்டிய பயிர்கள் சரியான முறையில் சுத்தமாக கழுவாமல் முளைக்கட்ட வைத்து உட்கொண்டால், அது உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தான் அதிகரிக்கும். எனவே முடிந்த வரையில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், உண்ணும் உணவை வேக வைத்து உட்கொள்வது நல்லது.

  • கடைகளில் சில காய்கறிகளை வெட்டப்பட்ட நிலையில் பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இப்படி வெட்டப்பட்டு விற்கப்படும் காய்கறிகள் அசுத்தமானதாகவே இருக்கும். எனவே இம்மாதிரியான உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

  • நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், பாலைக் குடிக்கும் முன் அதனை நன்கு காய்ச்சிய பின்னரே பருக வேண்டும். ஏனெனில் பச்சை பாலில் ஒட்டுண்ணிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும்.

  • உடல்நிலை சரியில்லாத நேரத்திலோ அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள தருணத்திலோ, முட்டையை பச்சையாக குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் பச்சை பாலில் ஒட்டுண்ணிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும்.

  • மார்கெட்டுகளில் பாக்கெட்டு போட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி உண்பதை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறைச்சியை பதப்படுத்த சேர்க்கப்படும் கெமிக்கல்களால் இன்னும் உடல்நிலை மோசமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

  • பாட்டில் அல்லது டப்பாவில் அடைத்து விற்கப்படும் எந்த ஒரு பானமும் சுத்தமானதும் அல்ல ஆரோக்கியமானதும் அல்ல. ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்