உடல் எடை சட்டென குறைக்க வேண்டுமா? இந்த காபியை தினமும் காலையில் ஒரு கப் குடிச்சு பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பலரும் உடல் எடை குறைக்க பெரிதும் கஷ்டப்பட்டு கொண்டு வருகின்றனர்.

தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

அதற்கு காபி பெரிதும் உதவி புரிகின்றது. ஏனெனில் சர்க்கரை சேர்க்கப்படாத ப்ளாக் காபி உடல் எடை குறைய உதவுகிறது .இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்படுகின்றன.

அந்தவகையில் இந்த பானத்தை எப்படி தயாரிக்கலாம், இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

எப்படி தயாரிக்கலாம்?
முக்கிய குறிப்பு

இதனை அளவாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு, குமட்டல், செரிமான பிரச்சனை போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், கவனமாக பயன்படுத்த வேண்டும்.

பயன் என்ன?
  • காபியில் உள்ள கஃபைன், தியோப்ரோமின், தியோஃப்லின் மற்றும் க்ளோரோஜெனிக் அமிலங்களை சீராக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • காபியில் இருக்க கூடிய கஃபைன் உடலின் ஆற்றல் மற்றும் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும் தெர்மோ ஜெனிசிஸ் செயல்முறையை தூண்ட கூடியதாய் இருக்கிறது. உடலில் வெப்பம் சீராக இருக்கும்போது தான் நாம் உண்ணும் உணவு ஜீரணமாவதோடு, உடலிலுள்ள கலோரிகளும் எரிக்கப்படுகிறது.
  • எலுமிச்சை சாறு உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீராக இருந்தால்தான் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அதனால், தினமும் உங்கள் காலையை எலுமிச்சை சாறு குடித்து துவங்குங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்