ஆரோக்கியமாக வாழ ஆதிதமிழனின் சுவையான உணவு- இதை சாப்பிடுங்கள்!

Report Print Nalini in ஆரோக்கியம்

சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு, ‘பி’ காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவாகும்.

இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது, 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்ற ஒன்று.

பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்யும்.

கேழ்வரகில் உள்ள நன்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்

  • மோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.
  • 2 வயதுக்குப் பின் பெரியவர்கள் உண்பதுபோல குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.
  • கேழ்வரகு மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.
  • கேழ்வரகு மாவுடன் வெல்லம் சேர்த்தும் அடை செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.
  • செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் மட்டுமே உண்ண வேண்டும்.
  • இது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் உயிர்காக்கும்.
  • பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும், பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை இது போக்கிவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்