உயரமாக வளர உங்களுக்கு ஆசையா இருக்கா? அப்போ தினமும் இதை செஞ்சு பாருங்க

Report Print Nalini in ஆரோக்கியம்

பொதுவாக சில பெண்களுக்கு உயரமான பெண்களை பார்த்தல் சற்று பெறாமையாக தான் இருக்கும்.

ஏனெனில் குள்ளமான பெண்கள் தாங்கள் உயராமாக இல்லையே என கவலை இருக்கும். இனி இந்த கவலைக்கு இடமேயில்லை வீட்டிலே இருந்து இந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும். உயரமாக வளரலாம்.

உயரமாக வளர என்னென்ன உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று பார்ப்போம்

நீச்சல்

நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக வளர உதவி செய்யும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது முக்கியம்.

தொங்குவது

இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவி செய்கிறது.

இடுப்பை உயர்த்துதல்

கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.

ஸ்கிப்பிங்

உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.

கால்களை மேல் உயர்த்துதல்

நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது முக்கியம்.

பிலேட்ஸ் பயிற்சி

தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக உதவும். இதனால், நீங்கள் சீரான முறையில் உயரமாக வளர முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்