வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெள்ளரி நம் உடலுக்கும் தோலுக்கும் ஏராளமான ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ள ஒரு பழம்.

இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு காயாகும்.

வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

வெள்ளரிக்காயில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து, பாஸ்பர்ஸ், கந்தகம், சிலிகன், குளோரின், ஆகியவை உள்ளது. இதில் 95% நீர் சத்து உள்ளது. கெட்ட நச்சுபொருட்களை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

அந்தவகையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 • வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.
 • காலரா நோயாளிகள் வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.
 • வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
 • தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும் போட்டு வைத்து வெஜிடபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச்செய்யும்.
 • வெள்ளிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.
 • மலச்சிக்கல் உள்ளவர்கள் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
 • முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
 • நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்.
 • வெள்ளரிக்காயை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.
 • முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு, இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு, பச்சடிக் கீரைச் சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்று விடும்.
 • வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்