புற்றுநோயாளிகளே! கட்டாயம் இந்த இயற்கை உணவுகளை உங்கள் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.

புற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்பாடுடன் வைத்து கொள்வது அவசியமானது ஆகும்.

இதற்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

அந்தவகையில் புற்றுநோயாளிகள் தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில இயற்கை உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • முட்டையில் உள்ள வைட்டமின் பி, டி, ஈ மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் புற்றுநோய் மருத்துவத்தின் பின் விளைவுகளை குறைக்கக் கூடியதாக உள்ளது. இதனால் வாந்தி, மயக்கம், முடி உதிர்தல், வயிற்று வலி ஆகிய விளைவுகளை குறைக்க முடியும்.

  • ஹீமோதெரபி செய்வதற்கு முன் இஞ்சி சாப்பிட்டால், குமட்டல் உணர்வு குறைவாக இருக்கும். இதனால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை.

  • அகாய் பெர்ரி (Acai Berry) என்பது ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த ஊட்டச்சத்தாகும். இது புற்றுநோய் மட்டுமல்லாமல், இதர நோய்களையும் எதிர்க்கும் சிறந்த உணவாக உள்ளது.

  • புற்றுநோயின் பின் விளைவுகளை குறைக்கும் வகையில் பெப்பர்மின்ட் மூலிகை பயன்படுகின்றது. இது நாவறட்சி, குமட்டல், அதிர்ச்சி ஆகிய விளைவுகளை குறைக்கிறது. உடலின் நீர்ம தன்மை குறையாமல் இருக்கவும் உதவுகிறது.

  • புற்றுநோயை உண்டாக்கும் திசுக்களை கொல்லும் சக்தி இதற்கு உள்ளது. சோயாவில் உள்ள கெயின்ஸ்டீன் இந்த வேலையை சரிவர செய்கிறது. இதை உட்கொள்வதால், புற்றுநோயை உண்டாக்கும் திசுக்களை வளர விடாமல் செய்ய முடியும். மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் இதை உண்டால், மார்பகத்தில் ஏற்பட்டுள்ள கட்டிகளை குறைக்க முடியும்.

  • பீன்ஸ், பயிறு, அவரை மற்றும் பட்டாணி வகைகளில் அதிக அளவு வைட்டமின் பி உள்ளது. இவை பழுதடைந்த திசுக்களை குணமாக்க உதவுகின்றது. இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் திறன் கொண்ட உணவுகளாகும். நமது இரத்தச் சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்து உடலை சீக்கிரம் குணமடைய செய்கின்றது.

  • மோரில் உள்ள எதிர்ப்பு சக்தி சளி மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. இவற்றில் புற்றுநோயை தடுக்கும் சக்தி உள்ளது.

  • புதிய பச்சை இலை காய்கறிகளில். ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இந்த உணவு புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்