உணவின் சுவைக்காக சேர்க்கும் இந்த மசாலா பொருளில் பல ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளதாம்! அது என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

இலவங்கப் பட்டை என்பது சாதாரணமாக நாம் சமைக்கும் ஒரு மசாலா பொருளாகும். ஆதிகாலத்திலிருந்தே மக்கள் இலவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

சளி, காய்ச்சல், இருமல், கபம்,வயிற்று வலி, அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற உடல்நல பிரச்சினைகளை போக்க இலவங்கப்பட்டை பெரிதும் உதவியாக இருந்தது.

பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

அதுமட்டுமின்றி இதிலுள்ள மருத்துவகுணம் உடலில் உள்ள பல நோய்களை குணமாக்க உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது இலவங்கப்பட்டையில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள் என்னெ்னன என்பதை பற்றி பார்ப்போம்.

  • வாரம் ஒருமுறையாவது தேநீரில் அல்லது பட்டை தூள் சேர்த்த வெதுவெதுப்பான நீரை குடித்துவந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • வயதான பிறகு வரக்கூடிய மறதி என்னும் அல்சைமர், பர்கின்சன் என்னும் நோய், நரம்பியல் நோய்களை தடுக்கிறது. இலவங்கபட்டையானது மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.

  • பட்டை நீரை வாய்க்கொப்புளித்துவந்தால் அது வாய்க்கிருமிகளை அழிப்பதோடு சிறந்த இயற்கை மவுத் வாஷாகவும் இருக்கும். பெரும்பாலான பற்பொடிகளிலும், பேஸ்ட்களிலிலும் பட்டையும் முக்கியபொருளாக சேர்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

  • இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைப்பதில் பட்டை சிறப்பாக பயன்படுகிறது.அதே நேரம் சர்க்கரை கட்டுக்குள் இருப்பவர்கள் அதிக அளவு பட்டையை எடுத்துகொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை மிக வேகமாக குறைத்துவிடும். இதுவும் அபாயகரமானதே என்பதையும் கவனிக்க வேண்டும்.

  • பட்டை உடலில் இருக்கும் மோசமான விளைவுகளை உண்டாக்கும் எல்.டி.எல் என்னும் கேட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. தினசரி பட்டைத்தூளை எடுத்துகொண்டவர்களுக்கு உடலில் இருந்த நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.மேலும் பட்டை ரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தை குறைப்பதில் பெரிதும் உதவுகிறது.

  • நுரையீரல் சளியை வெளியேற்றும் கைவைத்தியம் எதுவாக இருந்தாலும் அதில் பட்டைதூளை சிறிதளவு சேர்த்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

  • சளி, காய்ச்சல், இருமல் போன்ற நேரங்களிலும் பட்டைதூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் நிவாரணம் விரைவாக கிடைக்கும். இலவங்கபட்டை எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

  • மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தபோக்கை எதிர்கொள்கின்றபவர்கள் உணவில் அதிகம் பட்டை சேர்த்து வந்தால் அதிக இரத்தபோக்கு கட்டுப்படுத்த முடியும்.

  • உடல் எடை குறைய பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். பட்டையை தூளாக்கி தேனில் குழைத்தும் சாப்பிடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்