இரத்த தானம் செய்பவர்கள் கட்டாயம் இவற்றை கடைபிடியுங்கள்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

தானத்திலே சிறந்த தானம் இரத்த தானம் தான் என்று நமது பெரியவர்கள் நம்மிடம் அடிக்கடி கூறுவதுண்டு.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக் குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

ஓர் ஆரோக்கிய மான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம்.

இவ்வாறு இரத்த தானம் கொடுப்பவர்கள் சில வழிமுறைகள் கடைப்பிடிப்பது அவசியமானது ஆகும்

அந்தவகையில் இரத்த தானம் செய்பவர்கள் எவற்றை எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?

 • நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.
 • 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.
 • குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.
 • இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் இரத்த தானம் கொடுக்க முடியாது?
 • எச்.ஐ.வி அல்லது ஹெபடைடிஸுக்கு சாதகமாக இருப்பவர்கள்.
 • ரத்த உறைதல் கோளாறு இருப்பவர்கள்.
 • கடந்த ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களில் மாரடைப்பு ஏற்பட்டவர்கள்.
 • கடந்த ஆண்டில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்.
 • இருதய மருந்து எடுத்துக்கொள்பவர்கள்.
 • சமீபத்தில் மலேரியா தாக்குதலுக்கு உள்ளவர்கள்.
 • சமீபத்தில் அல்லது கடந்த ஆண்டில் ரத்தம், பிளாஸ்மா அல்லது பிற ரத்தக் கூறுகளைப் பெற்றிருப்பவர்கள்.
 • சமீபத்தில் கருக்கலைப்பு செய்தவர்கள்.
 • புற்றுநோய் சிகிச்சைக்கான கீமோதெரபி / கதிர்வீச்சைப் பெற்றவர்கள்.
 • மிதமான அல்லது கடுமையான வகை ரத்த சோகை உள்ளவர்கள்.
 • ஒரு நபர் சமீபத்தில் பச்சை குத்தியிருந்தால ரத்த தானம் செய்யக்கூடாது.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள், நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?
 • நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.
 • தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?
 • நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.
 • ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.
 • 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.
 • இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.
இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.

பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

 • நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.

 • தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்