கருவாட்டை யாரெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

கருவாட்டின் ருசியை சுவைக்காத அசைவ பிரியர்கள் யாரும் இருக்கவே முடியாது.

ஏன்னா, கருவாட்டின் வாசனை பிடிக்காதவர்கள் கூட அதனை ருசிக்க மறக்கமாட்டார்கள். அசைவ உணவுகளிலேயே அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு மட்டும்தான்.

கருவாடு, மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போது மோர், தயிர் மற்றும் கீரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஏனெனில் இது புட் பாய்சனுக்கு வழிவகுத்துவிடும்.

கருவாடை யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு பார்க்கலாம்.

  • கருவாட்டை சமைக்கும் போது மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவற்றை சேர்த்து சமைத்தால் ஆரோக்கியமானதாக இருக்கும், இதனை குடித்தாலும் அஜீரணக் கோளாறு, மந்தம், பசியின்மைக்கு தீர்வாக அமையும்.
  • இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் உப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சருமப் பிரச்சனை மற்றும் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் கருவாடு சாப்பிடாமல் இருப்பது நல்லது.
  • கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது. கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாயும் கூட இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவுகள் தான்.
  • மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்