ஆண்கள் செய்யக்கூடாத இந்த 10 விஷயங்கள் என்னென்னு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்

இன்றைய வேலை மற்றும் வாழ்வியல் மாற்றத்தின் காரணமாக ஆண்களுக்கு விந்தணு திறன் மற்றும் உற்பத்தி குறைபாடு ஏற்படுகின்றது.

இதற்கான முக்கிய காரணங்கள் என்னவென்று இப்போது இங்கு பார்ப்போம்

சுடுநீர் குளியல்

பெரும்பாலான ஆண்கள் உடல் வலி குறைக்க சூடான நீரில் குளிப்பார்கள். மேலும் இவ்வாறு செய்யும் பொழுது அணுக்களின் தரம் குறைவதோடு உற்பத்தியும் தடைபடுமாம்.

இறுக்கமான உடை அணிதல்

அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருப்பதால் இவை அணுக்களின் உற்பத்தியை குறைக்குமாம். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிவது நல்லது.

நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவது

ஆண்கள் நீண்ட நேரம் மொபைல் போனை பயன்படுத்தினால் உற்பத்தி குறையும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம் ஆண்களின் உடலில் உற்பத்தி குறைந்து சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

குடி பழக்கம்

ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கின்றது. இதனால் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

புகைப்பிடித்தல்

சிகரெட்டில் உள்ள புகையிலையானது, உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றது.

சோயா பொருட்கள்

ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொள்வதால் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ் அணுக்களின் எண்ணிக்கை தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்குமாம்.

டிவி பார்த்தல்

தினமும் டிவி பார்க்கும் ஆண்களுக்கு உற்பத்தி குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே தினமும் டிவியை அதிகம் பார்க்காமல் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

லேப்டாப்

பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமாம். எனவே லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்