உங்களுக்கு சாப்பிட்டதும் எதுக்களிக்குதா? அதனைப் போக்க சில எளிய தீர்வுகள்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் எதுக்களிப்பு.

ஆரோக்கியமற்ற அல்லது உடல் ஏற்றுக் கொள்ளாத உணவுகளை எடுத்துக் கொள்வதால் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகின்றது.இருப்பினும் இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

உணவுக் குழாயின் கடைசி தசை சரியாக இயங்காமல் இருப்பதால் இந்த பாதிப்பு உண்டாகலாம். மேலும் சில உணவுகள் கூட எதுக்களிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

அதில் குறிப்பாக நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்கலித்தலை ஊக்குவிக்கும் உணவாக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவுகள், காபி ,மதுபானங்கள், சாக்லேட், கொழுப்பு உணவுகள் போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றது.

ஏனெனில் இத்தகைய உணவுகளில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நாள்பட்ட இரைப்பை சவ்வு அழற்சி உண்டாகலாம். மேலும் இவை இரைப்பையை எரிச்சல் அடையச் செய்து, தாழ்வான உணவுக்குழாய் சுருங்கு தசையை பாதிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் உண்டாகிறது.

நெஞ்செரிச்சல் ,வாந்தி ,தூக்கமின்மை ,பசியின்மை ,நெஞ்சு வலி ,மூச்சுத் திணறல் ,பேசுவதில் கடினம் ,தொண்டை வலி ,மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

அந்தவகையில் இதுபோன்ற பிரச்சினையிலிருந்து விடுபட சில இயற்கை தீர்வுகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

என்ன தீர்வு?

  • ஒரு கப் தண்ணீரில், 3 ஸ்பூன் துருவிய உருளைக் கிழங்கை போட்டு வேக விடவும். பிறகு 10 நிமிடம் அதனை ஆற வைக்கவும். பிறகு அந்த கலவையை மிக்சியில் அரைக்கவும்.

  • எலுமிச்சை அமில தன்மைக் கொண்ட பழமாக இருப்பினும், அது வயிற்றை அடையும்போது அதன் அதிகரித்த அமிலத்தன்மை சமன் செய்யப்படுகிறது.

  • ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் 6 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை பருகவும்.

  • ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்வது நல்லது. நன்றாக கொதித்தவுடன், சிறிது ஆறிய பிறகு, அதில் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்க்கவும். உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நரம் முன்னதாக இந்த நீரை பருகவும்.

  • 4 வாழைப்பழத்தின் தோலை உரித்து, 4 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். ஒரு நாள் முழுவதும் இந்த நீரை குடித்துக் கொண்டே வரவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...