சிறுநீரகங்களில் உள்ள அழுக்கை வெளியேற்றனுமா? அப்போ அடிக்கடி இந்த ஜூஸ்கள் குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

மனித உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

அந்தவகையில் சிறுநீரகங்களில் உள்ள அழுக்கை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்து கொள்ள சில இயற்கை பானங்கள் உதவி புரிகின்றது.

தற்போது அந்த அற்புத பானங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • பீட்ரூட்டை ஜூஸ் வடிவில் உட்கொள்ளுவது நல்லது.ஏனெனில் இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு, சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைக் குறைக்கும்.
  • சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல், சுத்தமாக இருக்க நினைத்தால், அவ்வப்போது கிரான்பெர்ரி ஜூஸ் குடியுங்கள்.
  • தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். ஏனெனில் எலுமிச்சை ஜூஸில் உள்ள அமிலத்தன்மை, சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரிக்கின்றது. இதனால் சிறுநீரக கல் உருவாக்க அபாயம் குறையும்.
  • ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரக கல் உருவாக்கத்தைத் தடுக்கும். குறிப்பாக சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.
  • அடிக்கடி பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஸ்மூத்தி தயாரித்துக் குடியுங்கள். இது உடலில் இருந்து ப்ரீ-ராடிக்கல்களை அழிப்பதோடு, சிறநீரக நோய்களையும் தடுக்கும்.
  • தினமும் ஒரு டம்ளர் டேன்டேலியன் டீயைக் குடித்தால், சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சிறுநீரக நோய்களும் தடுக்கப்படும்.
  • தினமும் கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் தயாரித்தோ குடியுங்கள். ஏனெனில் கேரட்டில் உள்ள நார்ச்சத்து டாக்ஸின்களுடன் பிணைந்து, உடலில் இருந்து வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
  • செலரி, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, லெட்யூஸ் போன்றவை சிறுநீரகங்களுக்கு நல்ல பலனளிக்கக்கூடியவை. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், சிறுநீரகங்கள் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்கும்.
  • இளநீரைக் குடித்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். மேலும் இளநீர் உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கும்.
  • அன்னாசிப் பழத்தையோ அல்லது அதன் ஜூஸையோ தவறாமல் அடிக்கடி உட்கொள்ளுங்கள். ஏனெனில் இது சரியான சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்