தினமும் தேன் இலவங்கப்பட்டை கலந்து சாப்பிடுங்க... உங்க உடம்பில் அதிசயம் நடக்குமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

தேன் பலவகையான மருத்துவ குணங்கள் கொண்டது என்பது அனைவரும் அறிந்த தகவலே. இது உடல் எடை குறைப்பவர்கள் முதல் பலரும் அதை தினமும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார்கள்.

அதேபோல் இலவங்கப்பட்டையிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கின்றது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, தும்மல், ஜலதோஷம், இருமல் போன்றவற்றுக்கும் லவங்கப்பட்டை சேர்த்து வருகின்றோம்.

ஆனால் இவை இரண்டும் சேரும் பொழுது இதை விட இரண்டு மடங்கு அதிகமான, நன்மைகள் கிடைக்கின்றது.

நமது உடலில் உள்ள உபாதைகளுக்கு மருந்தாக மாறுகிறது. இந்தவகையில் தற்போது அவற்றை பார்ப்போம்.

Image via artproem / Shutterstock
  • இலவங்கப் பட்டையை மாவு போல் நன்றாக அரைத்துக் கொண்டு தேனுடன் கலந்து தினமும் இரண்டு நேரம் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், கை கால் விரல்கள் முட்டு அனைத்து இடங்களில் ஏற்படக்கூடிய வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • எலும்புகளில் வலி இருப்பவர்கள் தேனையும் இலவங்கப் பட்டையை தினமும் சேர்த்துக் கொள்வது விரைவில் நிவாரணம் தரும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • தேனையும் அதனுடன் லவங்கப்பட்டையின் நன்றாக அரைத்து ஒரு டீஸ்பூன் தேனில் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை சேருமாறு ஒரு கலவையை சேர்த்து முகப் பருக்கள் இருக்கும் இடத்தில் அதை தொட்டு ஒவ்வொன்றாக நன்றாகப் படும்படி 10 நிமிடம் வைத்து 10 நிமிடங்கள் கழித்து லேசான சுடு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும் காலை மற்றும் இரவு என்று தினமும் இரண்டு முறை இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
  • தினமும் இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இலவங்கப்பட்டை மாவுடன் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வராமலிருக்கும் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை கிடைக்கும்.
  • உடல் எடை குறைப்பவர்கள் நினைப்பவர்கள் ஒரு கப் சூடான நீரை எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் லவங்கப்பட்டை பவுடரை சேர்க்க வேண்டும். பின்பு ஒரு 10 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். அதற்குப் பின்னர் ஒரு டீஸ்பூன் மலைத்தேன் பின்பு இந்த கலவையை தினமும் இரண்டு முறை குடித்து வர வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்