காதில் சீழ் வடிகின்றதா? அதனை எளிய முறையில் போக்க இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in ஆரோக்கியம்

மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வருகிறது.

காது நோய்களில் முக்கியமானது, காதுவலி, காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காதுவலி வரும்.

அதிலும் முக்கியமானது காதில் சீழ் வடிதல். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். இது நாளாடைவில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம் ஆகும்.

காதில் வலி,காதிலிருந்து நாற்றத்துடன் நீர் கசிதல் ,சமநிலை இழப்பு ,எரிச்சல் ,தூக்கமின்மை,காதில் இழுப்பது போன்ற உணர்வு ஏற்படுதல், காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

இதிலிருந்து விடுபட அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு எளிய முறையில் இயற்கை கை மருந்துகள் பல உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

நாயுறுவி இலைகள்
netrigun

நாயுறுவி இலைகள் எலுமிச்சை அளவு பறித்து சுத்தமான நீரில் கழுவி அம்மியில் நசித்து கொள்ளவும்.

மேலே கூறியபடி ஒரு துணியில் வைத்து முறுக்கினால் வரும் சாற்றை எடுத்து சீழ் வரும் காதில் காலை, மாலை 2 சொட்டு வீதம் 2 நாட்கள் விட்டுவர குணம் பெறலாம்.

இந்துப்பு
Boldsky

இந்துப்பு 1௦ கிராம், தோல் சீவிய சுக்கு 1௦ கிராம் இரண்டையும் நைசாக தூளாக்கி ஒரு சிறிய சட்டியில் 5௦ மில்லி நீர் விட்டு அதில் தூளைப் போட்டு காய்ச்சி, பின் இறக்கி வைக்க வேண்டும்.

ஆறியதும் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, கஷாயத்தை ஒரு சிறிய பாட்டலில் ஊற்றி வைத்துக் கொண்டு சீழ் வரும் காதில் காலை, மாலை 2 சொட்டு சீழ் நிற்கும் வரை விட்டு பஞ்சினால் காதை அடைத்துவர நிவாரணம் கிடைக்கும்.

தூதுவளை இலைகள்
Google

தூதுவளை இலைகள் 2௦ பெரிய இலைகளாகப் பறித்து சுத்தம் செய்து அவற்றை அம்மியில் சிறிதளவு நீர் விட்டு நசித்து ஒரு மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும் .

அவற்றை காலை, மாலை வேளைக்கு 2 சொட்டு சீழ் வரும் காதில் தொடர்ந்து 3 நாட்கள் விட்டுவர குணமாகும். ஒவ்வொரு முறையும் பஞ்சினால் காதை அடைத்துக் கொள்ள வேண்டும்.

ஜாதி மல்லிகை இலை
Google

ஜாதி மல்லிகை இலைகள் 3௦ஐப் பறித்து சுத்தம் செய்து லேசாக உணர்ந்த உடன் ஒரு நடுத்தர கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இலைகளைப் போட்டுக் காய்ச்ச வேண்டும்.

சூடு ஆறியதும் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி எண்ணெயை ஒரு சிறிய பாட்டலில் இருப்பு வைத்து தினமும் காலை, மாலை காதில் 2 சொட்டு தொடர்ந்து சீழ் நிற்கும் வரை விட்டு வர வேண்டும். அவ்வப்போது காதில் பஞ்சினால் அடைத்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்