தினமும் இத ஒரு கையளவு சாப்பிடுங்க.. தொப்பை நிச்சயம் குறையுமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் வேர்க்கடலையும். இது சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது

மேலும் இதில் அத்துடன், மற்ற புரதங்களான பயோடின், காப்பர், பொட்டாசியம், ஃபோலெட், நியாசின், தயாமின் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்களும காணப்படுகின்றன.

குறிப்பாக இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவி புரிகின்றது. அதுமட்டுமின்றி இது பல நன்மைகளை அள்ளித்தருகின்றது.

அந்தவகையில் தற்போது வேர்க்கடலை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

Getty Images
  • வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடல் எடை அதிகரிப்பை சுலபமாக தடுத்திடலாம்.
  • வேர்க்கடலையின் முக்கிய நன்மையே, அதை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசியே ஏற்படாது.
  • வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புடன், கலோரியையும் எரிக்க உதவுகின்றன.
  • வேர்க்கடலை தான், செரிக்க தாமதம் ஆகும் நார்ச்சத்தை கொண்ட ஒரு உணவு. இதன்மூலம், உடல் எடையை கட்டுப்படுத்திட முடியும். அதுமட்டுமல்லாது, இது இரத்த சர்க்கரையை நிலையானதாக வைத்திருக்கிறது.
  • வேர்க்கடலை செரிக்க தாமதமாவதோடு, தாமதமாக தான் சர்க்கரையையும் இரத்தத்தில் வெளியேற்றும். எனவே தான், நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது.
  • உங்களுக்கு தூக்கம் வந்தால் அல்லது சோம்பலாக உணர்ந்தாலோ ஒரு கை வேர்க்கடலையை எடுத்து சாப்பிடுங்கள் போதும், சுறுசுறுப்புடன் இருப்பது மட்டுமின்றி, சுவையான தீனி சாப்பிட்டது போல் இருக்கும்.
  • மலச்சிக்கல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு கிடைக்க வேர்க்கடலை சாப்பிடலாம்.
  • வேர்க்கடலையில் உள்ள ஒமேகா 6 சருமத்திற்கு நன்மை பயக்கும்.
  • இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்