ஆசனவாயில் அரிப்பு தொல்லையா? அதனை எப்படி போக்குவது?

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக வயிற்றில் பூச்சி இருந்தால் அடிக்கடி ஆசனவாயில் அரிப்பு ஏற்படுவதுண்டு.

இதற்கு 6 மாதத்திறிகு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்வது அவசியம். இல்லாவிடின் பூச்சு தொல்லை அதிகரித்துவிடும்.

அந்தவகையில் ஆசன வாயில் ஏற்படும் கடுமையான எரிச்சல் மற்றும் குடைச்சலை நாம் சமையல் அறையில் உபயோகபடுத்தும் பொருள்களை கொண்டே குணப்படுத்தலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

Google

  • 5 பூண்டு பற்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அந்நீரால் ஆசன வாய் பகுதியைக் கழுவுங்கள். இப்படி கழுவி வர அரிப்பு அகலும்.

  • புடலங்காய் தோல், விதை மற்றும் வெண்டைகாய் ஆகிய காய்கறிகளை வேக வைத்து பொரியல் செய்து சாப்பிட்டால் அரிப்பு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

  • உருளைக்கிழங்கை வெட்டி, அதன் துண்டுகளை ஆசன வாயில் சிறிது நேரம் தேய்த்து உலர வைத்தால், நல்ல பலன் கிடைக்கும். உருளைக்கிழங்கும் மூல நோயால் ஏற்படும் வீக்கத்தைப் போக்கும்.

  • சீமைச்சாமந்தியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்நீரைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியைத் துடைத்து எடுக்க வேண்டும்.

  • வைட்டமின் ஈ எண்ணெயை ஆசன வாய் பகுதியில் தடவினால், வறட்சி குறைவதோடு, மூல நோயும் விரைவில் குணமாகும்.

  • விளக்கெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் டீட்ரீ ஆயில் சேர்த்து கலந்து ஆசன வாயில் காட்டன் பயன்படுத்தி தேய்த்தால், எரிச்சல் மற்றும் குடைச்சலைத் தரும் வீக்கம் குறையும்.

  • ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, ஆசன வாய் பகுதியில் தடவினால், எரிச்சல் மற்றும் குடைச்சலில் இருந்து விடுபடலாம்.

  • ஆசன வாயில் எரிச்சல் அல்லது குடைச்சல் அதிகமாக இருந்தால், கற்றாழை ஜெல்லை அப்பகுதியில் தடவுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்