மார்பக புற்றுநோயை தடுப்பது எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்? எந்த உணவுகளை சாப்படி கூடாது?

Report Print Kavitha in ஆரோக்கியம்

உயிரை பறிக்கும் கொடிய நோய்களுள் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும்.

உலகளவிய ரீதியில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் என்ணிக்கை அதிகரித்து வரு வதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதித்துவந்த மார்பக புற்றுநோய் தற்போது 30 வயதுக்கொண்ட பெண்களையும் பாதிக்கிறது.

இதற்கு உணவு பழக்கமும் வாழ்க்கை முறையும் மார்பக புற்றுநோய்க்கு காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதிலும் குறைப்பதிலும் சத்தான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

சத்தான உணவுகளை உட்கொண்டாலே போதும் மார்பக புற்றுநோய்க்கு மருந்து எடுக்க அவசியமிருக்காது.

அந்தவகையில் மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் அதன் வளர்ச்சிக்கு எந்தெந்த உணவுகள் வழிவகுக்கின்றன என இங்கு பார்ப்போம்.

சாப்பிட வேண்டியவை
 • பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள் மற்றும் கருப்பு ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் அதிக அளவு பாலிபீனால் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
 • மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க தினமும் 1 கப் பெர்ரிகளை உட்கொள்ளுங்கள்.
 • பிளம்ஸ் மற்றும் பீச் பழங்களில் இருக்கும் பாலிபினால்கள் மார்பக புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
 • காலே, ப்ரோக்கோலி, கீரை, பீட் கீரைகள், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க உதவும்.
 • கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் கேண்டலூப்ஸ் போன்ற ஆரஞ்சு நிற காய்கறிகள்.
 • பழுப்பு அரிசி, ஓட்மீல், சோளம், பார்லி மற்றும் முழு கோதுமை போன்ற முழு தானிய உணவுகள் மார்பக புற்றுநோய் அபாயத்தை நிர்வகிப்பதில் இவை அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கோல்ட் வாட்டர் மீன், ஆலிவ் எண்ணெய், விதைகள், நட்ஸ் மற்றும் வெண்ணெய் பழங்கள் போன்ற மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.
 • மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய் போன்ற மசாலாப் பொருட்கள் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
சாப்பிட கூடாதாவை
 • ஆல்கஹாலை மிதமாக உட்கொள்பவர்களுக்கு 30-50% மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
 • வறுத்த உணவுகள், டோனட்ஸ், பேஸ்ட்ரிகள் மற்றும் கேக் போன்ற பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் நிறைந்த உணவு களை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் உருவாகலாம் என்று அறியப்பட்டுள்ளது.
 • மாதவிடாய் நின்ற பெண்கள் அதிக அளவில் சிவப்பு இறைச்சியை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படும்.
 • சர்க்கரை பானங்கள் அதிகளவு நிறைந்த பானங்களை தவரிக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்