பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்- கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
415Shares

பொதுவாக ஒவ்வொரு பெண்களும் தங்களது யோனி ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுவதில்லை.

அதனால் பல நோய்த்தொற்றுகள் யோனியில் ஏற்பட்டு, கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

இது போன்ற பிரச்சினைகளை சந்திக்காமால் இருக்க ஒவ்வொரு பெண்களும் தங்களது பிறப்புறுப்பை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்வது அவசியமானது ஆகும்.

பெண்களின் பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

அந்தவகையில் தற்போது எந்தெந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள, யோனியில் உள்ள செல்களை வலிமையாக்கி, நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும்.

  • மீனை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் மீனில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, மாதவிடாய் கால வலிகள் மற்றும் பிடிப்புக்களைக் குறைத்து, மாதவிடாய் சுழற்சி காலத்தில் யோனியின் அசௌகரியத்தைக் குறைக்கும்.

  • தினமும் தயிரை பெண்கள் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள புரோபயோடிக்குகள் யோனியைத் தாக்கும் ஈஸ்ட் தொற்றுகளில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, யோனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  • சோயா பொருட்களை உட்கொள்வது நல்லது. சோயா யோனியில் உள்ள சளி சுரப்பிகளை எப்போதும் செயல்பாட்டுடன் இருக்கச் செய்து, யோனி வறட்சியடைவதைத் தடுக்கும்.

  • ஆப்பிளை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுறவு கொள்ளும் போது பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும்.

  • க்ரான்பெர்ரி ஜூஸ் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகளில் இருந்து விரைவில் நிவாரணம் வழங்கும். ஏனெனில் இதற்கு க்ரான்பெர்ரியில் இயற்கையாகவே உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம்.

  • பெண்களும் பூண்டு சாப்பிட வேண்டும். பெண்கள் பூண்டு சாப்பிடுவதால் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுவது குறையும். மேலும் பூண்டு பாலுணர்ச்சியைத் தூண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்