பாதாம் பால் குடிப்பது எவ்வளவு மோசமாக பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தப்படும் பானங்களில் பாதம் பாலும் ஒன்றாகும்.

இதில் பால் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் பிற முக்கிய தாதுக்கள் நிறைந்தது.

என்னத்தான் இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கினாலும் இதில் பக்கவிளைவுகளும் உண்டு.

குறிப்பாக இதன் விதைகள் மற்றும் கொட்டைகள் ஒவ்வாமை இருந்தால் இதனை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் தற்போது பாதாம் பாலினால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

Google

  • நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் முகத்தில் வீக்கம், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

  • தைராய்டு சுரப்பியை பாதிக்கும் பொருட்கள் இதில் உள்ளதால் இது சுரப்பியின் அயோடின் ஒருங்கிணைப்பை பாதிக்கும், இதனால் இந்த சுரப்பி விரிவடையும். ஆகவே பாதாம் பால் குடிப்பது ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனை தவிர்ப்பது நல்லது.

  • பாதாம் பால் உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

  • பாதாம் பால் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மாறாக நாளடைவில் அவர்களின் செயல்பாடுகளில் இது சிக்கல்களை ஏற்படுத்தும்.

  • லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் பால் அதிகம் குடிப்பது பல பக்க விளைவுகளை உண்டாக்கும்.

  • பாதாம் பாலை உட்கொள்வது அரிப்பு, சரும அழற்சி மற்றும் படை நோய் போன்ற தோல் எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

  • பாதாம் பாலில் ஒவ்வாமை உள்ளவர்கள் வயிற்றுப் பிடிப்பை எதிர்கொள்ள நேரிடும், ஏனெனில் இந்த பாலை ஜீரணிப்பது கடினம்.

  • ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் பாதாம் பால் குடிப்பது அவர்கள் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.

  • பாதாம் சுவை கொண்ட பாலை ஜீரணிக்க முடியாதவர்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படலாம்.

  • பாதாம் பால் குடிப்பது சளி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வழிவகுக்கும். எனவே ஏற்கனவே சளி பிடித்து இருப்பவர்கள் பாதாம் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers