அச்சுறுத்தும் சக்கரை நோயை விரட்ட வேண்டுமா? அப்போ இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

மக்களை அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் சக்கரை நோயும் ஒன்றாகும்.

இதனை கட்டுக்குள் வைக்க வாழ்நாள் முழுவதும் நிறைய மாத்திரைகள், உணவு மாற்றங்கள் முதலியவற்றை கொண்டு பின்பற்ற வேண்டும்.

ஆனால் சில இயற்கையான உணவுப் பொருட்கள் கூட சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவி செய்கிறது.

அதில் ஒன்று தான் வெள்ளை காளான்கள். இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகச் சிறந்த என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் இந்த வெள்ளை காளானில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை உள்ளது. மேலும் இதில் ஆன்டி டயாபெட்டிக் தன்மை இருக்கிறது.

வெள்ளை காளான்கள் சாப்பிட்டு வந்தால் அது ஒரு புரோபயாடிக் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.

இது குடலில் மைக்ரோ நுண்ணுயிரிகள் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதோடு இது கல்லீரலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

வெள்ளைக்காளான் சக்கரை நோய்க்கு மற்றமின்றி வேறு பல நோய்களையும் தீர்க்க உதவி புரிகின்றது.

அந்தவைகயில் இந்த வெள்ளைக்காளளை சக்கரை நோயாளிகள் எடுத்து கொள்வதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Google
சக்கரை நோயாளிகள் இந்தவகை காளானை சாப்பிடலாமா?
  • சர்க்கரை நோயாளிகள் காளான்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை தான் சேர்கிறது.
  • வைட்டமின் பி மற்றும் பாலிசாக்ரைடு போன்ற சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் சத்தை வழங்குகிறது.
  • இரத்த சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதன் ஆன்டி பயாடிக் தன்மை, உணவிற்கு சுவையளிக்கிறது.
  • எனவே சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் காளான்களை சேர்த்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
வேறு நன்மைகள்
  • வெள்ளை காளான்கள் குறைந்த கலோரியை கொண்டு இருப்பதால் உடம்பில் கொழுப்பு படியாது. இதனால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதய இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைப்பு ஏற்படாது. இந்த காளான்களில் அழற்சி எதிர்ப்பு தன்மையும் உள்ளது.
  • காளான்களில் குறைந்தளவு கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுவதால் உடல் எடையை குறைப்பவர்கள் தாராளமாக இதை பயன்படுத்தலாம்.
  • வெள்ளை காளான் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டு இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்