உங்க பாதங்களில் துர்நாற்றம் வீசுதா? இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நம்மில் சிலர் பாதங்களில் வியர்வையுடன் கூடிய துர்நாற்றம் வீசுவதை உணர்ந்திருக்கின்றோம்.

அது அவர்கள் அருகில் உள்ள மற்றவர்களுக்கு இந்த பாதிப்பு ஒரு வித அசௌகரியத்தை உண்டாக்கும்.

இவ்வித உடல் உபாதைகள் மற்றும் ஆரோக்கிய சீர்கேடுகள் நாம் எடுத்துக் கொள்ளும் பானம் மற்றும் உணவின் வழியாக கூட உண்டாகிறது.

இதனை தடுக்க நாம் சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுவதனால் பாத துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.

அந்தவகையில் தற்போது பாத துர்நாற்றத்தைப் போக்க உதவும் சரியான உணவுகள் என்ன என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Google
  • எலுமிச்சை, நார்த்தம் பழம் போன்ற பழங்களை தினசரி எடுத்துக் கொள்ளலாம். மேலும் மற்ற புளிப்பு சுவை கொண்ட பழங்களை தினமும் எடுத்துக் கொள்வதால் உடல் துர்நாற்றத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.
  • போதா மீன், பண்ணா மீன், நெய் மீன் போன்ற வகை மீன்கள் உடல் முழுவதும் தலை முதல் கால் வரை உண்டாகும் துர்நாற்றத்தைப் போக்க உதவுகின்றன.
  • பார்ஸ்லி, ஆளி, புதினா, ரோஸ்மேரி, ஜாதிபத்திரி போன்ற மூலிகைகளில் பச்சையம் மற்றும் இதர துர்நாற்றம் அழிக்கும் .மேலும் அடர் பச்சை நிறமுடைய இலைகள் கொண்ட காய்கறிகளில் பச்சையம் அதிகம் இருப்பதால் அவற்றை அதிகம் உட்கொள்வதால் உங்கள் உடல் முழுவதும் வாசனையுடன் விளங்கும்.
  • உப்பு நிறைந்த கடல் உயிரினமாகிய கடற்சிப்பியை உட்கொள்வதால் உடல் துர்நாற்றம் விலகும்.
  • இயற்கை முறையில் பாதங்களை நீரில் ஊற வைத்து அடிக்கடி கழுவி வரலாம். தினமும் உங்கள் காலணி மற்றும் காலுறைகளை மாற்றுவதால், தொடர்ந்து உங்கள் கால்களை அடிக்கடி சுத்தம் செய்வதால் இந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்