பேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா? உடனே படிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பேரிச்சம் பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும்.

அந்தகாலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.

இது உடலில் உள்ள பல நோய்களை குணமாக்குகின்றது.

குறிப்பாக பேரிச்சம் பழத்தில் கொழுப்புகள் மிகவும் குறைவாது ஆகும். மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது.

அந்தவகையில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

google

 • பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
 • தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
 • பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
 • பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையும்.
 • தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
 • தினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்பாட்டு கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.
 • நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
 • கருவுற்றிருக்கும் பெண்களும் பேரிச்சம் பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது அப்பெண்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
 • மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் பேரிச்சம்பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.
 • ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அது மட்டுமின்றி ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.
 • பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
 • கர்ப்பமாக இருக்கும்போது, இதனை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.
 • தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று, ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
 • பேரிச்சம் பழங்களை அதிகம் உண்டு வருபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது.
 • போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். உடல் நலத்தையும் மேம்படுத்தும்.
 • வயிற்று போக்கால் அவதியுறுபவர்கள் தினமும் 3 வேளை சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றுபோக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.
 • பேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து குறையும்.
 • பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை ரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.
 • பேரிச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி இருமல் குணமாகும்.
 • பேரிச்சம்பழ சாறு குடிக்கலாம். இது ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

 • பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக்கடுப்பால் அவதியுறும் போது பேரிச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்