சக்கரை நோய் முதல் ஆண்மை குறைப்பாடு வரை தீர்வளிக்கும் கருப்பட்டி!

Report Print Kavitha in ஆரோக்கியம்

கருப்பட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும்.

கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருப்பதனால் இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது.

கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது.

இனிப்பு உணவுகளில் நாம் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது.

அந்தவகையில் தற்போது கருப்படியை எந்த எந்த நோய்களுக்கு எல்லாம் சாப்பிடலாம் என இங்கு பார்ப்போம்.

Google
  • கருப்பட்டியானது, நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவி புரிகிறது.
  • பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து, உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க, கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து, சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
  • ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
  • குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
  • ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.
  • சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்.
  • சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • அடிக்கடி சிறுநீர் போவது குறையும். உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்