நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள்?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நமது உடல் தேவையானவற்றை ஊட்டச்சத்துக்கள் மற்றும் கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.

உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள், மேலதிக சில கரையங்கள், மேலதிகமாக உடலிலுள்ள நீர் போன்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.

ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

அதுமட்டுமின்றி நீண்ட நேரமாக சிறுநீரை அடக்குவதனாலும் உடல் அளவில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகின்றது.

வேலை பளு அதிகமாக இருக்கும் போது சிறுநீர் கழிக்காமல் இருப்பது, தூக்கத்தில் இருக்கும்போது எழுந்து பாத்ரூமிற்கு செல்ல வேண்டுமென்ற சோம்பேறித்தனத்தில், பொது இடங்களுக்கு செல்லும் போது சிறுநீரகத்தை வெளியேற்றாமல் அதனை அடக்கி வைப்பது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் சிறுநீரகப் பிரச்னைக்கு முக்கிய காரணமாகி விடுகின்றன.

அந்தவகையில் நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவதனால் ஏற்படும் பிரச்னை பற்றி இங்கு பார்ப்போம்.

  • சிறுநீரை அதிக நேரம் வெளியேற்றாமல் இருப்பதால் முதலில் உடலில் சிறுநீரக கல் பிரச்னை ஏற்படுகிறது.
  • சிறுநீரகப்பை அதிக நேரம் நிறுத்துவது சிறுநீரக பையில் அழுத்தத்தை அதிகரித்து கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.
  • தொடர்ந்து சிறுநீரகத்தை வெளியேற்றாமல் இருப்பதால் சிறுநீரகப்பை விரிவடைவது மட்டுமன்றி, அதன் சதையும் விரிவடைகிறது. இதனால் சிறுநீரகப்பை முற்றிலுமாக சேதம் அடைந்து விடுகிறது.
  • சிறுநீர் நீண்ட நேரம் சிறுநீர்ப்பையிலேயே தங்கியிருப்பதால் நுண்கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமுண்டு.
  • சிறுநீரினை அடக்குவதால் அதில் உள்ள நச்சுக்கள் சிறுநீர்ப்பையைத் தாக்கும் பின்பு சிறுநீர் பாதையையும், சிறுநீரகத்தையும் தாக்கும்.
  • சிறுநீரினை நீண்ட நேரம் அடக்குவதால் சிறுநீரைத் தடுப்பதால் நீர்க்கட்டு, புண், கட்டிகள், சீழ் கோர்த்த வீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...