உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கா? இந்த வண்ண நிற சிகிச்சையை செய்தாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் இருந்த ஒரு பண்டைய கால சிகிச்சை முறைகளில் க்ரோமோதெரபியும் ஒன்றாகும்.

இது வண்ண ஒளி சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

வண்ணங்களை உபயோகப்படுத்தி, உடலின் அதிர்வுகளை சரிசெய்யவும், உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்தவும், உடல், உணர்ச்சி, மன மற்றும் ஆன்மீக முறைகளில் குணப்படுத்தவும் உதவுகிறது.

இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறமும், தனக்கென ஒரு தனி அதிர்வலைகளை கொண்டு, உடலில் உள்ள பல்வேறு பிரச்னைகளை சரிசெய்கிறது.

இந்த சிகிச்சை முறை உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளுக்கான காரணத்தை கண்டறிந்துவிடுகிறது.

அந்தவகையில் தற்போது இந்த வண்ண நிற சிகிச்சையை எப்படி செய்யலாம், இது செய்வதனால் என்ன நன்மை ஏற்படும் என்பதை பார்ப்போம்.

 • சிவப்பு நிறம் இரத்த அழுத்தத்தை உயர்த்த பயன்படுவதாகவும், மேலும், இரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுவதாகவும் நம்பப்படுகிறது.
 • பச்சை நிறம் உடலுக்கு நல்ல நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்தையும், மன அமைதியையும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
 • பிங்க் நிறம் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்புகள் மற்றும் தமனிகளை பலப்படுத்த உதவுகிறது.
 • மஞ்சள் நிறம் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும். செரிமானத்திற்கும், சரும சுத்திகரிப்பிற்கும், வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
 • ஆரஞ்சுநிறம் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி குறைவதற்கு பெரிதும் உதவுகிறது.
 • ஊதா நிறம் தசைகளை நிதானப்படுத்தவும், மேலும் சிறுநீர் கோளாறுகள் மற்றும் மனநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.
 • நீலம் மனநிம்மதியை இது ஊக்கப்படுத்துவதோடு, தலைவலி, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை, சளி, ஒற்றை தலைவலி, மனஅழுத்தம், வாத நோய் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.
 • இண்டிகோ இது உடலில் அமைதியை ஏற்படுத்துகிறது. மேலும், கண், காது, மூக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குணப்படுத்த பயன்படுகிறது.
க்ரோமோதெரபியின் நன்மைகள்
 • க்ரோமோதெரபி, தசைகளை அமைதிப்படுத்தவும் மற்றும் முடக்கு வாதம் தொடர்பான வியாதிகளுடன் தொடர்புடைய மூட்டுகளுக்கிடையே உராய்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதன் விளைவாக, மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், காயத்தைத் தடுக்கவும் பயன்படுகிறது.
 • இறுக்கமாக தசை இருப்பவர்களுக்கு, இந்த வண்ண ஒளி சிகிச்சை முறையின் மூலம், தசைகளில் உள்ள வலி மற்றும் இறுக்கத்தை நீக்கிடலாம். இரத்த குழாய்களில் அழுத்தத்தை குறைத்து, தசைகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது. இதனால், தசைகளில் உள்ள வலி மற்றும் இறுக்கம் குறைகிறது.
 • க்ரோமோதெரபி நிம்மதி உறக்கத்திற்கும், சீரான மனநிலையை பெறவும் உதவுகிறது.
 • க்ரோமோதெரபி குளிர்காலத்தில் தொடங்கும் பருவநிலை பாதிப்பு கோளாறுகள் (Seasonal Affective Disorders(SAD) தொடர்பான காரணத்தை கண்டறிந்து பருவநிலை மாற்ற கோளாறுகளை நீக்கி, அதன் அறிகுறிகள் ஏற்படுவதையும் தடுத்திடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • க்ரோமோதெரபி சருமத்தை சுத்தப்படுத்தி புத்துயிர் பெறச்செய்வதன் மூலமும், சுருக்கங்களை நீக்குவதன் மூலமும், தோல் செல்களை உற்சாகப்படுத்துவதன் மூலமும், செயலற்ற தோல் செல்களை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலமும் செயல்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்