பல்வேறு காரணங்களால் பல் மற்றும் ஈறு வலி ஏற்படுவது அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாகும்.
இதனால் உணவுகளை உட்கொள்வதில் அசௌகரியம் ஏற்படுவதுடன், கதைப்பதற்கும் கடினமாக இருக்கும்.
எனவே இப் பிரச்சினைக்கு வீட்டிலிருந்தவாறே தீர்வு காண்பதற்கு சில இயற்கை வைத்தியங்கள் காணப்படுகின்றன.
அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
உப்புத்தண்ணீர்
மிதமான சூடு கொண்ட ஒரு கிளாஸ் நீரில் அரை தேகரண்டி உப்பினை இட்டு நன்கு கலக்கிய பின்னர் அதனை வாயினுள் இட்டு சில செக்கன்கள் வைத்திருந்த பின்னர் வெளியேற்றவும்.
இது வீக்கத்தை போக்குவதுடன் துர்நாற்றம் மற்றும் பற்குழிகளுக்கு காரணமான பக்டீரியாக்களையும் கொல்கின்றது.
உள்ளி
உள்ளியை கராம்புடன் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து எடுத்து பசையில் சிறிதளவை வலியை ஏற்படுத்தும் பல் அல்லது ஈற்றுப் பகுதியில் பூசவும்.
அல்லது உள்ளி மற்றும் கராம்பினை வெறுமையாக மென்று வந்தாலும் பல்வலி, ஈற்றுவலி நீங்கும்.
ஆவி எண்ணெய் (Essential Oil)
இவ் எண்ணெயில் இரண்டு அல்லது மூன்று துளிகளை விரலில் எடுத்து வலியை ஏற்படுத்தும் பல் மற்றும் ஈறு பகுதியினை மசாஜ் செய்யவும்.
இதற்கு பதிலாக கராம்பு மற்றும் மிளகு எண்ணெயினையும் பயன்படுத்த முடியும்.
தேயிலைப் பொதி
சில வகை தேயிலைப் பொதிகளில் tannins எனப்படும் ஒரு சேர்வை காணப்படுகின்றது.
இது பல்வலியைப் போக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது.
தேயிலைப் பை ஒன்றினை 5 நிமிடங்கள் வரை கொதி நீரில் இட்டு பின்னர் சிறிது நேரத்தில் சூடு குறைந்ததும் வலி காணப்படும் பல் அல்லது ஈறுப் பகுதியில் 5 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
கற்றாழை
கற்றாளையானது ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்ட ஒரு தாவரமாகும்.
இதிலுள்ள ஜெல் பகுதியை எடுத்து வலி உண்டான பகுதியில் வைத்து மசாஜ் செய்யவும்.
இது ஒரு இயற்கையான ஆன்டிபயோட்டிக் தாவரம் என்பதால் கிருமிகளை அகற்றுவதுடன், பற்சிதைவையும் தடுகின்றது.