பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்பட இவை எல்லாம் காரணமாம்! உஷாரா இருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக சில பெண்களுக்கு அடிக்கடி மார்பகங்கள் வலிப்பதுண்டு. இது எதனால் என்று தெரியமால் பலர் அதிக அச்சம் கொள்ளுவதுண்டு.

அன்றாட வாழ்வில் செய்யும் வேலைகள் மற்றும் சிறு சிறு கவனக் குறைவுகளினால் கூட ஏற்படுபடுகின்றது. எனவே இதற்கு பெரிதும் அச்சப்பட தேவையில்லை.

இதற்கு உண்டான காரணங்களை தெரிந்து கொண்டாலே இதிலிருந்து விடுபட முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

Google
  • மாதவிடாய் நாளுக்கு முன்பு உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் மாற்றங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளினாலும் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.
  • இறுக்கமாக அல்லது சிறிய கப் உள்ளாடைகளை நாள் முழுக்க அணிவதால் பெரும்பாலான பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.
  • சரியாக வியர்வை வெளிவராமல் இருந்தால் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும்.
  • சிலருக்கு அவர்களது உடலோடு ஒப்பிடும் போது, அளவுக்கு அதிகமாக பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும். இதுவும் கூட மார்பக வலி ஏற்பட காரணமாக இருக்கிறது.
  • சில வகை கப்பூசீனோ, எஸ்பிரெசோவில் இருக்கும் காப்ஃபைன் வகைகளின் காரணங்களால் பெண்களுக்கு மார்பக வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்.
  • உடற்பயிற்சி செய்யும் பெண்கள், திடீரென அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மார்பக வலி ஏற்படும்.
  • விளையாட்டில் ஈடுபடும் பெண்கள், அதற்கான பிரத்தியோக உள்ளாடைகள் அணிந்து பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். ஏனெனில், பயிற்சியில் ஈடுபடும் போது, ஃபிட்டாக இன்றி அதிகமாக மார்பகங்கள் அசையும் காரணங்களால் கூட வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்