நோயை விரட்டும் முருங்கை... எப்படி தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

முருங்கை மரத்தில் இலை, பூ, காய் என எல்லாம் மருத்துவ குணமும் அதிக உயிர்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது.

இது உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக காணப்படுகின்றது.

இதன் இலையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

இந்த பச்சை காய்கறியின் இலைகள் மற்றும் காய்கள், இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாகவும் கூட செயல்படுகிறது.

அந்தவகையில் தற்போது முருங்கையில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நன்மைகள்

  • முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து சூப்வைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுக்கு நல்லது.
  • பெண்கள் முருங்கை கீரையை வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான பிரச்னை தீரும்.
  • வைட்டமின் ஏ சத்து நிரம்பி இருப்பதால் ஒளிபடைத்த கண்ணுடனே வளம் வரலாம்.
  • ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு நீக்க மிகவும் உதவியாக இருப்பது முருங்கை இலை.
  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி உடலைப் பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • ஆண் மற்றும் பெண்களுக்கு உள்ள மலட்டுத் தன்மை நீங்கவும் இளமைப் பொலிவு பெறவும் முருங்கை முக்கியத்துவம் பெறுகிறது.
  • பச்சையான முருங்கை இலைச்சாறு ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு அதில் பாதி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட உடல் தொப்பை மறைந்து நல்ல தேகம் பெறலாம்.
  • சிறிதளவு முருங்கை இலைச்சாறுடன் உப்புக்கரைசல் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்.
  • முருங்கை கீரையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம்.
  • முருங்கை பொடியில் வைட்டமின் கே.ஏ.இ கால்சியம், ஆன்டி ஆக்சிடனஸ் உள்ளது. முருங்கை பவுடர்; களைப்பு மற்றும் சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.
  • முருங்கை இலை சூப் மற்றும் கசாயம் மூட்டுவலி, முதுகு வலியை நீக்கி எலும்புக்கு நல்ல பலத்தை தருவதுடன் உறுதியுடனும் விளங்க உதவிபுரிகிறது.
  • முருங்கைப்பூ பொரியல் மற்றும் கூட்டு செய்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...